தமிழகத்தில் கொரோனா வைரஸ்: புதிதாக 2115 பேர் பாதிப்பு; மேலும் 41 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 54,449ஆக உயர்ந்துள்ளது.

மாநில சுகாதாரத் துறை அளித்துள்ள தகவல்களின்படி, இன்று அடையாளம் காணப்பட்ட 2,115 பேரில் 2,075 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 3 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். மீதமிருப்பவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்தவர்களில் 13 பேருக்கும் டெல்லியிலிருந்து வந்தவர்கள் 15 பேருக்கும் இன்று நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே, சென்னைத் தவிர்த்த பிற மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர்.

அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட 2141 பேரில் 1322 பேர் சென்னையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டில் 95 பேரும் கோயம்புத்தூரில் 29 பேரும் திண்டுக்கல்லில் 22 பேரும் காஞ்சிபுரத்தில் 39 பேரும் மதுரையில் 58 பேரும் ராமநாதபுரத்தில் 21 பேரும் சிவகங்கையில் 18 பேரும் திருவள்ளூரில் 85 பேரும் திருவண்ணாமலையில் 37 பேரும் தூத்துக்குடியில் 26 பேரும் வேலூரில் 103 விழுப்புரத்தில் 31பேரும் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38,327ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 3,432 பேரும் திருவள்ளூரில் 2,291 பேரும் காஞ்சிபுரத்தில் 1001 பேரும் இதுவரை ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 27,537 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆகவே தமிழ்நாட்டில் செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 8,27,980ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,630 பேர் குணமடைந்துள்ளனர். ஆகவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,271 உயர்ந்திருக்கிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 23,509ஆக இருக்கிறது.

இன்று 41 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 26 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்நோய்த் தொற்றினால் 666 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 10 பேருக்கு வேறு எவ்வித இணை நோயும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 30 பேர் ஆண்கள். 11 பேர் பெண்கள். 6 பேர் ஐம்பது வயதுக்குட்பட்டவர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: