சென்னை தீவுத்திடலை விட்டு வெளியேற்றப்படும் குடியிருப்புவாசிகள் - நடப்பது என்ன?

காணொளிக் குறிப்பு, சென்னை தீவுத்திடலில் போராட்டம்: இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

சென்னை நகரத்தின் பழமையான குடிசைப்பகுதிகளில் ஒன்றான தீவுத்திடலில், கூவம் நதி மாசுபடுவதை தவிர்க்க சுமார் 2,000 குடும்பங்களை பெரும்பாக்கத்திற்கு இடமாற்றம் செய்வதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதை எதிர்த்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். "எங்களுக்கு இந்த இடம்வேண்டும். இந்த இடத்திலிருந்து நாங்கள் வெளியேறமாட்டோம். எங்கள் உயிரே போனாலும் நாங்கள் போகமாட்டோம். எங்கள் குழந்தைகளுக்கு படிப்பு வசதி இங்கேதான் உள்ளது" என்று தீவுத்திடல் குடியிருப்புவாசியான உஷா கூறுகிறார்.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

காணொளி தொகுப்பாக்கம்: கே.வி. கண்ணன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: