You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக உள்ளாட்சி தேர்தல்: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி நடந்த வேண்டும் - உச்சநீதிமன்றம்
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் பூஷன் ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.
திமுக சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, புதிய மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு முறை உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட தமிழக அரசு சார்பாக வாதாடிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, திமுக தேர்தலை நிறுத்த முயற்சி செய்வதாக தெரிவித்தார். தேர்தல் நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
1991 கணக்கெடுப்பின் படி உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்த நிலையில், தற்போது 2011 கணக்கெடுப்பின்படி நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: