அமெரிக்க யூத வழிபாட்டு தளத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி - வெறுப்பு குற்றமா?

யூத வழிபாட்டு தளத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள யூத வழிப்பாட்டு தளத்தில் துப்பாக்கிதாரி சுட்டதில் பெண் ஒருவர் பலியானார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் ஒருவர் தெரிவிக்கிறார்.

இந்த தாக்குதல் ஈடுப்பட்ட 19 வயது நபர் ஒருவர் பலியாகி உள்ளார். இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்று போலீஸார் கூறாத நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை வெறுப்பு குற்றமென கூறுகிறார். பீட்பெக்கில் ஆறு மாதங்களுக்கு முன்பு யூத வழிப்பாட்டு தளத்தில் நடந்த தாக்குதலில் 11 பேர் பலியாகினர். அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் யூதர்களுக்கு எதிராக நடந்த மோசமான தாக்குதல் இதுவாகும்.

தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க முயல்கிறதா ஐ.எஸ் குழு?

இலங்கையில் ஈஸ்டர் தினமான கடந்த 21ஆம் தேதி தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் இதுவரை 253 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. தாக்குதல் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டது உள்ளூரில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புதான் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், இஸ்லாமிய அரசு என்று தங்களைக் கூறிக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்தது.

ஃபானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்

ஏப்ரல் 30ம் தேதி கரையை கடக்கும் ஃபானி புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கரைகளுக்கு அருகில் வரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.ஊடகங்களிடம் பேசிய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் அடுத்த 24 மணிநேரத்தில் ஃபானி புயல் வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளார்.''தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வட தமிழகத்தின் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 1,250 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்துவரும் 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கரை அருகில் வரக்கூடும்,'' என்றார்.

அம்பாறை சாய்ந்தமருதில் வாடகை வீடெடுத்த ஆயுததாரிகள் - தகவல் தெரிந்தது எப்படி?

இலங்கையின் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று, வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 16 பேர் பலியாகியுள்ளனர்.பலியானோரில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவர்.சாய்ந்தமருதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 'பொலிவேரியன்' வீட்டுத் திட்டத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.குறித்த பகுதியிலுள்ள வீடொன்றை வாடகைக்குப் பெற்று, அதில் வெளி ஊரைச் சேர்ந்த சிலர் தங்கியுள்ளனர்.இந்த நிலையில், இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள், இவர்கள் குறித்து அங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

கோமதி மாரிமுத்து: வறுமை, பசி, பல தடைகளை கடந்த தங்கமங்கை

23வது சர்வதேச ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு அரசியல் கட்சியினர் பலரும் உதவித்தொகை வழங்கி வருகின்றனர்.திருச்சி மாவட்டம், முடிகண்டம் கிராமத்தில், வறுமை மட்டுமே நிரம்பிய எளிய குடும்பத்தில் பிறந்து, வளரும் காலத்தில் தந்தையை இழந்து, தன்னம்பிக்கையை துணையாக கொண்டு விளையாட்டு துறையில் சாதித்துள்ளார் கோமதி.அவரின் இரண்டு சகோதரிகள் இன்றும் தினக்கூலியாக வேலைசெய்துவருகிறார்கள். தன் குடும்பத்தை மட்டுமல்ல தன்னை போல விளையாட்டு துறையில் சாதிக்க தடைகளை சந்திக்கும் பலருக்கும் உதவ தயாராகும் கோமதியிடம் பேசினோம். பேட்டியிலிருந்து:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :