You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் எந்தெந்தத் தொகுதியில் எவ்வளவு வாக்குப்பதிவு?
தமிழகத்தில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வேலூர் தவிர, பிற 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 9 மணிக்கு கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் 70.90% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தற்போது இறுதி வாக்குப்பதிவு விகிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் நடந்த 16வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து 73.74% வாக்குகள் பதிவாகியிருந்தன.
ஏழு கட்டங்களாக நடக்கும் 17வது மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் இருக்கும் 38 தொகுதிகள் உள்பட, 11 மாநிலங்ககளில் இருக்கும் 95 தொகுதிகளுக்கு வியாழனன்று நடைபெற்றது.
அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 80.49% வாக்குகள் பதிவாகியுள்ளன. வேறு எந்தத் தொகுதியிலும் 80%ஐ விடவும் கூடுதலான வாக்குகள் பதிவாகவில்லை.
குறைந்தபட்சமாக தென்சென்னை தொகுதியில் 56.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சென்னையில் 59.25% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த இரு தொகுதிகளில் மட்டுமே 60%ஐ விடவும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்