அழியா பிளாஸ்டிக் ஏற்படுத்தும் உயிர் அழிவு பிரச்சனைகள் (புகைப்பட தொகுப்பு)

பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உலகெங்கிலும் உள்ள நீர்வாழ் உயிரினங்களுக்கு சிக்கல்களை உருவாக்கி வருகின்றன. நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிகையின் ஜூன் மாத பதிப்பில் இந்த உலகளாவிய பிரச்சனையை சித்தரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஸ்பெயினில் ஒரு குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் பை ஒன்றில் சிக்கிய இந்த கொக்கு உயிர் பிழைத்தது இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரரின் உதவியால் தான்.

மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் இந்த வலை வீணாகிப்போனதும் கடலில் வீசப்பட்டிருக்கும். அதில் சிக்கிக்கொண்ட ஆமை தலையை தூக்கி மூச்சு விடுகிறது. வலைச் சிக்கலை அவிழ்க்க முயன்றால், அதுவே ஆமைக்கு ஆபத்தாகிவிடுமோ என்று புகைப்படக்காரர் அச்சப்பட்டார்.

ஜப்பானின் ஒகினாவாவில் பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் சிக்கிக்கொண்ட நண்டு.

பிளாஸ்டிக் பூமியில் ஏற்படுத்துவதைவிட கடலில் அதிக மாசை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் கழிவு சிறு துண்டுகளாக நொறுக்கப்பட்டாலும் அது கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

டாக்காவின் புருகங்கா ஆற்றில் பிளாஸ்டிக் பைகளை கழுவி காய வைக்கும் பெண்ணும் அவரது மகனும். இந்த பிளாஸ்டிக், மறுசுழற்சி செய்யப்படுகிறது. மொத்த பிளாஸ்டிக்கில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவானவையே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. அமெரிக்காவில், 10% பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.

எத்தியோப்பியாவில், பிளாஸ்டிக் மாசுக்குள் தானாகவே வந்து சேரும் இந்த கழுதைப்புலிகள் குப்பைக் கொட்டும் இடத்தில் இருந்து தங்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.

மக்களுக்கு பிளாஸ்டிக் மாசுபாட்டைப் பற்றி எச்சரிப்பதற்காக லுசிஸ்ட்ரோடஸ் என்ற ஒரு கலைஞரும், வேறு இருவரும் சேர்ந்து மத்திய மாட்ரிட்டில் திபெல்ஸ் நீரூற்றில் 60,000 கழிவுப் பாட்டில்களை நிரப்பினார்கள்.

இந்தோனேசியா தீவில், கடல் குதிரை காது குடையும் குச்சியை எடுத்துச் செல்கிறது. இதுபோன்ற ஒரு புகைப்படத்தை எடுக்கும் சூழல் எப்போதுமே வரக்கூடாது என்று புகைப்படக்காரர் ஹாஃப்மேன் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: