இலங்கை தமிழர்களை மறந்துவிட்டனரா தமிழக அரசியல்வாதிகள்?

'இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 9 ஆண்டுகளுக்கு பின்னும் இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க தமிழக அரசும் அரசியல்வாதிகளும் குரல் கொடுக்கிறார்களா அல்லது மறந்துவிட்டார்களா?' என்று பிபிசி தமிழின் ‪#‎வாதம்விவாதம்‬ பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

உமாராணி தமிழ்த்தேசம் எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர், "யுத்த விதிமுறைகளை மீறியவர்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டும். ஆனால் ஐ.நா மெளனிக்கிறது. கேட்கவேண்டிய ஆளும் எதிர்க்கட்சி வாய்திறக்கவில்லை," என்று கூறியுள்ளார்.

"அதிகம் பட்டவர்கள்தான் வலியை உணர்ந்து செயல்படுவார்கள் மொத்தத்தில் தமிழனுக்கு தீர்வு என்பது எட்டாக்கனிதான். மனம் என்று ஒன்று இருந்தால்தானே அரசியல்வாதிகள் உணர்வதற்கு," என்று முரளி தேவி எனும் நேயர் பதிவிட்டுள்ளார்.

துரை மைதிலி, "அவர்களுக்கு ஊழல் செய்து காசு சேர்க்கவே நேரம் போதவில்லை. இதில் எங்கே குரல் கொடுப்பது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"தமிழக அரசியல்வாதிகள் யாரும் மறக்கவில்லை, அது எப்படி மறப்பார்கள்? அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு எரிசக்தியே இலங்கை தமிழர்கள்தானே," என்று கூறியுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன்.

"தமிழர்களை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. தமிழ் நாட்டில் காலம் காலமாக குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்," என்பது வசந்தன் எனும் நேயரின் கருத்து.

"இலங்கை தமிழர்களை காக்க இந்திய தேசம் தவறிவிட்டது. இது வரலாற்றில் ஒரு மோசமான பிழை," என்று ஃபேஸ்புக் பதிவர் நவரத்தினம் நவகிரன் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: