You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிவினை எண்ணத்தைத் தூண்டுகிறதா கர்நாடகாவின் தனிக்கொடி?
கர்நாடக மாநிலத்துக்கான தனிக்கொடியை முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்துள்ளார்.
இது, உணர்வுப்பூர்வமாக மக்களை திரட்டி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியா?
அனைத்து மாநிலங்களும் இதேபோன்று தனிக்கொடியை உருவாக்கி, பிரிவினை எண்ணத்தைத் தூண்டும் என்ற வாதம் சரியா?
இது பற்றி பிபிசியின் வாதம் விவாதம் பகுதியில் நேயர்கள் கருத்துக்களை பதிவிட கேட்டிருந்தோம்.
நேயர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.
துரை முத்துசெல்வம் என்கிற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், "சித்தராமையாவின் அரசியல் ஆதாயம் திரட்டும் முயற்சிதான் இது. பிரிவினையை மறைமுகமாக தூண்டுகிறார் . இவர் சார்ந்துள்ள கட்சி இவரின் கொள்கைகளுக்கு எக்காலத்திலும் உடன்படாது. தனி கொடி ஏற்றுவது தன்னாட்சிக்கு நேரடியாகவே அறிவிப்பு விடுப்பதை போல உள்ளது," என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அருண் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், "இது போன்ற செயல் ஜனநாயக நாட்டில் தவறு. இது பிரிவினை எண்ணத்தை தூண்டும்," என்கிறார்.
சரோஜா சுப்பிரமணியன், "இன்றைய காலகட்டத்தில், மொழியையும், தனி கொடியையும், மதம் என்ற யானையையும், உசுப்பி விட்டு,, உசுப்பி விட்டுத்தான் அரசியல் நடக்கிறது, ஜெயிக்கவும் செய்கிறார்கள். வேதனைக்குரியது," என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்.
நிசார் அகமத் என்பவர், "இப்படியே எல்லா மாநிலங்களிலும் ஆரம்பித்தால் தேசிய ஒற்றுமை என்பது கேள்விக்குறியே," என்று பதிவிட்டுள்ளார்.
ஆன்டனி செல்வன் என்கிற நேயர், "ஆளுக்கும் மாட்டுக்கும் அடையாள அட்டை இருக்கும்போது மாநிலத்திற்கு அடையாள கொடி வைப்பதில் தவறொன்றும் இல்லை, " என்கிறார்.
என்கிறார்.தமிழகமும் தனி அடையாளத்தை பெற வேண்டும்! இதுவே சரியான நேரம்!என்கிறார். என்ற கருத்தை முகமது அகது தெரிவித்திருக்கிறார்.
மிகச்சிறந்த நடவடிக்கை என்பது சீ.திருநாவுக்கரசுவின் கருத்து
தாமஸ் பெர்னான்டஸ் ட்விட்டரில் வெளியிட்டடுள்ள பதிவில், "பிரிவினையில் இணைப்பு இருக்க வேண்டும். இது கூட தெரியாத??? பாவம்!!," என்று கூறுகிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்