You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வடமாநிலத்தைப் போல திருப்பூரில் சாதி பஞ்சாயத்து: கைது செய்ய ஆட்சியரிடம் மனு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வடமாநிலத்தைப் போல் சாதி பஞ்சாயத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தீத்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சக்திவேல், அவரது மனைவி தேவி. இவர்களது
ஆடுகள் எதிரில் உள்ள சரஸ்வதி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சென்று மேய்ந்த்தாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தலித் அல்லாத சாதியைச் சேர்ந்தவர்கள் அவரது குடும்பத்தினரை மிரட்டி 5000 ரூபாய் அபராதத் தொகை செலுத்தவேண்டும் என கூறியதாகத் தெரிகிறது.
பணம் செலுத்த முடியாததால் சத்திவேலின் 19-வயது மகளை மிரட்டி, பிற சாதியினரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சரஸ்வதி (எ) சரசு, சேகர், மனோகர், கவின், செந்தில் ஆகிய 5 பேரின் மீது இரண்டு வாரங்கள் கழித்து வன்கொடுமை தடுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், காலம் தாழ்த்துவதன் மூலம் அவர்கள் பிணையில் தப்பிச்செல்வதற்கான நடவடிக்கையை போலீஸார் செய்து வருவதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 5 நபர்கள் இரு வாரங்கள் ஆன நிலையில் கைது செய்யப்படாமல் உள்ளனர் எனவும் சக்திவேல், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
பெண்களின் கண்ணியமான வாழ்வையும், பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் நள்ளிரவில் பெண்களை மிரட்டி சாதிப் பஞ்சாயத்துக்கு வரவழைத்தும், பலர் முன்னிலையில் தகாத வார்த்தையில் பேசி மிரட்டியும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தும், தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்