#வாதம் விவாதம்: ''அரசு ஆமை போல செயல்பட்டதே காரணம்''

ஒக்கிப் புயலின் தாக்கத்தால் கொந்தளிக்கும் கடலில், மீன்பிடிக்கச் சென்ற டஜன் கணக்கான தமிழக மீனவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மீனவர்கள் சிக்கியுள்ளதற்கு காரணம். 'போதிய முன்னெச்சரிக்கை தரப்படாததா?, முன்னெச்சரிக்கை தரப்பட்டும் மீனவர்கள் கவனக்குறைவாக இருந்ததா?' என நேற்றைய பிபிசி தமிழின் சமூக வலைதள பக்கத்தில் 'வாதம் விவாதம்' பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு நேயர்கள் பதிவு செய்த கருத்துக்கள் இங்கே..

''போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இல்லாததால் தான் இந்த அளவுக்கு பிரச்சினை'' என சதிஷ் பதிவிட்டுள்ளார்.

''முன்னெச்செரிக்கை தந்தால் போதுமா? வயிற்றறுப் பசிக்கு உணவு தருவது யார்? இது கவனக்குறைவல்ல எங்களின் பணக்குறைவு'' என செல்வேந்திரன் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :