பெங்களூரு: 17 வயது மாணவியை கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததாக 4 பேர் கைது

17 வயது மாணவி ஒருவரை கடத்தி, கூட்டு பாலியல் வல்லுறவு செய்தது தொடர்பாக 4 பேரை இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ள பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நண்பர் ஒருவரை சந்திப்பதற்கு ரயில் நிலையம் சென்ற இந்த இளம் பெண்ணை இருவர் ஏமாற்றி, அவர்களோடு அழைத்து சென்றுள்ளனர்.

ஒரு ஹோட்டல் அறையில் அவரை 10 நாட்களாக அடைத்து வைத்து, பல முறை பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை கண்டுபிடித்தபோது அந்த ஹோட்டலின் உரிமையாளர். காவல்துறையிடம் தெரிவிப்பதற்கு பதிலாக, அவரும் அந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்றுள்ள கொடூரமான கூட்டு பாலியல் வல்லுறவு தாக்குதல்களில், மிகவும் சமீபத்தில் நிகழ்துள்ள இந்த சம்பவம், பாலியல் வன்முறையை தடுக்க மேற்கொள்ளப்படும் அண்மைய பரப்புரைகள் பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :