You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடகாவில் தலித்தைத் திருமணம் செய்த முஸ்லீம் பெண் எரித்துக் கொலை?
கர்நாடகா மாநிலத்தில் ஒரு தலித் இளைஞனை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு, கர்ப்பமாகி வீட்டிற்கு திரும்பிய முஸ்லீம் பெண்ணை, அந்த பெண்ணின் குடும்பத்தினர் உயிருடன் எரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
விஜயபுரா மாவட்டத்தில் உள்ள குண்டகன்னலா என்ற கிராமத்தில் வசித்துவந்த 24 வயதான சயபன்னா ஷரனப்பா கொன்னுர், மீது பா
னு பேகம் காதல் கொண்டிருந்தார்.
இருவரின் காதல் பற்றி தெரிந்துகொண்ட பானுவின் பெற்றோர் தங்களது மகள் வயது குறைவானவள் என்றும் சயபன்னா தங்களது மகளை மயக்கியுள்ளதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறையின் உதவியை நாடினர்.
கடந்த ஜனவரி 24ம் தேதி சயபன்னா-பானு ஜோடி ஊரைவிட்டு வெளியேறி, திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று கிராமத்திற்கு திரும்பிய அவர்கள், பானுவின் பெற்றோரிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொண்டுவந்திருப்பதாகக் கூறி, பானு கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
ஆனால் பானுவின் பெற்றோர் இதை வரவேற்கவில்லை. மாறாக, பானுவின் தந்தை இந்த உறவை முடித்துக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
தொடர்புடைய கட்டுரைகள்:
நாட்கள் செல்லச் செல்ல, தங்களது மகளையும் மருமகனையும் பானுவின் பெற்றோர் தாக்கியதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் சயபன்னா உதவி கோரியதால், அதிகாரிகள் பானுவின் வீட்டிற்கு வந்தபோது, பானு பெற்றோரால் ஆயுதத்தால் பல முறை குத்தப்பட்டு, தீவைத்துக் கொல்லப்பட்டிருந்ததைக் கண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனார்.
பிபிசி ஹிந்தியிடம் பேசிய விஜயபுரா மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் குல்தீப் குமார் ஜெயின், ''பானுவை அவரது பெற்றோர் தீ வைத்து உயிருடன் எரித்துக்கொன்றுவிட்டனர்,'' என்று தெரிவித்தார்.
''நாங்கள் பானுவின் அம்மா, சகோதரன், சகோதரி மற்றும் சயபன்னாவின் தந்தையை கைது செய்துள்ளோம்,'' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்