You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''அரசு ஊழியர் என்பவர் லட்சிய வேட்கையுடன், அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்'' : நந்தினி ஐ ஏ எஸ்
கடந்த ஒருவாரமாக, தனது நண்பர்களின் கேலி பேச்சுக்களுக்கு இலக்காகி இருந்தார் கே ஆர் நந்தினி.
அவர்தான் யுபிஎஸ்சி எனப்படும் குடிமைப்பணி தேர்வுகளில் முதலிடம் பெறுவார் என அவருடைய நண்பர்கள் நையாண்டி செய்து கொண்டிருந்தனர். அதாவது, அவர் நிச்சயமாக ஐ ஏ எஸ் அதிகாரியாக ஆவார் என்று கூறியிருந்தனர்.
ஃபரிதாபாத்தில் இந்திய வருவாய்த்துறையில் பணி செய்து கொண்டிருக்கும் நந்தினி பிபிசி இந்தியிடம் பேசுகையில், தேர்வு முடிவுகள் வெளிவந்த போது அதை நம்புவதற்கு கடினமாக இருந்தது என்கிறார்.
பெங்களூருவில் உள்ள எம் எஸ் ராமைய்யா தொழில்நுட்ப கல்லூரி நிறுவனத்தை இந்த சிவில் பொறியாளருக்கு ஐ ஏ எஸ் அதிகாரியாவதில் என்ன சிறப்பு உள்ளது ?
''சமூகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் உங்களை அர்ப்பணித்தால் ஐ ஏ எஸ் அதிகாரியாக நீங்கள் இருந்தால் அதை சிறப்பாகச் செய்யலாம் என்பதை நான் சில நிலைகளில் உணர்ந்தேன். எப்படி இருந்தாலும், ஐ ஏ எஸ் ஆவது என்பது எனது மனதில் ஆரம்பத்திலிருந்தே இருந்தது,'' என்றார் அவர்.
கர்நாடகாவில் உள்ள கொல்லர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவரின் மகளான நந்தினி தனது 12 ஆம் வகுப்பு படிப்பை முடிக்க சிக்மகலூர் மாவட்டத்தில் உள்ள மூடாபிட்ரிக்கு செல்வதற்குமுன் அரசுப்பள்ளி ஒன்றில் படித்தார்.
12 ஆம் வகுப்பில் 94.83 சதவீத மதிப்பெண்களை நந்தினி பெற்றார்.
அதன் பிறகு எம் எஸ் ராமைய்யா தொழில்நுட்ப கல்லூரியிலிருந்து சிவில் பொறியியலாளராக பட்டம் பெற்ற நந்தினி, உடனே கர்நாடக அரசின் பொதுப்பணித்துறையில் பணியாளராக இணைந்தார்.
பொதுப்பணித்துறையில் இரண்டு ஆண்டுகள் வேலைப்பார்த்த சமயத்தில்தான் அரசாங்கத்தின் அடிமட்டத்தில் செயல்பாடுகளை கவனித்தார் நந்தினி. ''அப்போதுதான் நான் ஐ ஏ எஸ் ஆனால் அதிகாரியாக சமூகத்திற்கு என்னால் சிறந்ததை தரமுடியும் என்று நினைத்தேன் '' என்றார்.
யு பி எஸ் சி தேர்வின் முதல் முயற்சியில் நந்தினி 642 வது தரவரிசையைப் பெற்று டிசம்பர் மாதம் 2015ல் இந்திய வருவாய்த்துறை பணியில் சேர்ந்தார்.
ஆனால், தன்னுடைய பயிற்சி காலத்தின் போதுதான், 26 வயதுடைய நந்தினி தில்லியில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து தான் பெரிதும் விரும்பிய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக தொடர்ந்து படிக்கலானார்.
பொதுப்பணித்துறையில் இரு ஆண்டுகள் மற்றும் இந்திய வருவாய்த்துறையில் ஒன்றரை ஆண்டுகள் அனுபவம் உள்ள நந்தினி ஒரு எளிமையான விதியை பின்பற்றுகிறார்.
''எங்கிருந்தாலும் சரி நாம் நம்முடைய சிறந்ததை கொடுக்க வேண்டும்,'' என்கிறார் நந்தினி.
நந்தினியை பொறுத்தவரை, சிறந்த அரசு ஊழியர் என்பவர், லட்சிய வேட்கையுடன் இருக்கவேண்டும், அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும் மற்றும் எத்தகைய சவால்கள் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனதுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
நந்தினியின் நண்பர்கள் எதிர்பார்த்தபடி அவருடைய செயல் நோக்கத்தின் அளவு அவரை முதல்படியில் நிறுத்தியிருக்க, சிறந்த அரசு ஊழியராக நந்தினி விளங்குவார் என்பதில் அவருக்கு பெரிய சவால்கள் இருக்கப்போவதில்லை.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்