You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா ஏழை நாடா? ஸ்னாப் சாட் மீது கோபம்
ஸ்னாப் சாட் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி, இந்தியா போன்ற ஏழை நாடுகளில் ஸ்னாப் சாட்டின் வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியாது என தெரிவித்ததாக எழுந்த செய்திகளையடுத்து சமூக ஊடகங்களில் அந்த செயலிக்கு எதிராக பலர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த செயலியை பயன்படுத்த கூடாது; அலைப்பேசியிலிருந்து அதை நீக்க வேண்டும் என்றும், கூகுள் ப்ளே ஸ்டோரில் அதற்கு ஒரு நட்சத்திர ரேட்டிங் கொடுக்க வேண்டும் எனவும் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
"பாய்காட் ஸ்னாப்சாட்", "அன்இன்ஸ்டால் ஸ்னாப்சாட்" என்ற ஹேஷ்டாக் டிவிட்டரில் அதிகமாக பரப்பப்பட்டது; அதே மாதிரி மீம்ஸ் பக்கங்களும் பரவலாக பகிரப்பட்டு வந்தன.
2015 ஆம் ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் ஸ்னாப் சாட்டின் நிர்வாக தலைவர் இவான் ஸ்பீகல் இந்தியா மற்றும் ஸ்பெயின் போன்ற ஏழை நாடுகளில் ஸ்னாப் சாட் செயலியை விரிவுபடுத்த முடியாது என தெரிவித்ததாக அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் "அபத்தமானவை" என்றும் "ஸ்னாப் சாட் செயலியை உலகம் முழுவதும் யார் வேண்டுமானாலும் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்" என ஸ்னாப் சாட் தெரிவித்துள்ளதாக "தி கார்டியனில்" வெளிவந்துள்ளது.
ஆனால் ஸ்பீகல் அவ்வாறு கூறியதாக எந்த ஆதாரமும் இதுவரை வெளி வரவில்லை; இதற்கிடையில் ஸ்னாப் சாட் என்ற செயலிக்கு பதிலாக ஸ்னாப் டீல் என்ற செயலியை சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் மக்கள் தவறாக புரிந்து கொண்டனர் என ஸ்னாப் டீலின் துணை நிறுவனர் குனால் பால் டீவிட் செய்துள்ளார்.
ஆனால் அவ்வாறு மக்கள் தவறாக புரிந்து கொண்டது குறித்தும் சமூக ஊடகங்களில் பல மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த செய்திகளும் சுவாரஸ்யமாக இருக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்