You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறாவிட்டால் அது போராட்டமாக மாறும்: கனிமொழி எச்சரிக்கை
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டும் சட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அங்கு சம அளவில் பெண் உறுப்பினர்கள் இல்லை, இந்த நிலை மாற நிச்சயமாக 33சதவீத இடக்கீடு செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டும் சட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அங்கு சம அளவில் பெண் உறுப்பினர்கள் இல்லை, இந்த நிலை மாற நிச்சயமாக 33சதவீத இடக்கீடு செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடை அமல்படுத்தக் கோரி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் டெல்லியில் இன்று பேரணி நடைபெற்றது.
திமுக மகளிர் அணி சார்பாக நடந்த அந்த பேரணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி டி.கே.ரங்கராஜன் மற்றும் மகளிர் தன்னார்வ அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கு பெற்று ஆதரவளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பேசிய கனிமொழி, இந்த இட ஒதுக்கீடு மசோதாவிற்கு திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டாலும் ஆட்சி மாற்றம் காரணமாக காலாவதியாகிவிட்டதால் அந்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பல சிரமத்திற்கு பிறகு நிறைவேறிய மசோதா இன்று காலம் கடந்துவிட்டதாகவும், 33 சதவீத இட ஒதுக்கீடை நிறைவேற்றுவேன் என பிரதமர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பல பிரதான கட்சிகளும் பல மாநில அரசுகளும் அந்த மசோதவை ஆதரிக்கும் நிலையில் அது சட்டமாக்கப்படாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் இயற்றும் சட்டம் குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு சரிசமமாக நாடாளுமன்றத்தில் பெண்கள் இல்லை, இந்த நிலை மாற நிச்சயமாக 33சதவீத இடக்கீடு செயல்படுத்தப்பட வேண்டும் என கோரிய கனிமொழி, 33 சதவீதத்தை அடுத்து 50 சதவீதம் வர வேண்டும் அதுவே நியாயம் என்று தெரிவித்தார்.
தங்களது உரிமையைப் பெறுவதற்காக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாகவும், நிறைவேறாதபட்சத்தில் அது போராட்டமாக மாறும் என்றும் கனிமொழி எச்சரித்தார்.
பெண்கள் சம உரிமையை அடைய இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றும் வரை திமுக ஓயாது என்றும் தெரிவித்தார் கனிமொழி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்