You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெருங்கடல்களின் சுவாசங்கள்: இதயத்துக்கு இதம் தரும் '2021' சிறந்த படங்கள்
மேற்கு ஆஸ்திரேலியாவின் நிங்கலூ கடலடி பவளப்பாறை பகுதியில் கண்ணாடி மீன்கள் புடை சூழ வலம் வந்த தோணி ஆமையின் படத்துக்கு 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த பெருங்கடல் புகைப்படத்துக்கான முதல் இடம் கிடைத்திருக்கிறது. இந்த படத்தை எடுத்தவர் எய்மீ ஜான் என்ற புகைப்பட கலைஞர்.
ஓஷியானிக் இதழ் நடத்திய இந்த போட்டி, பெருங்கடல்களின் அழகையும் அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் உலகம் அறிய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது.
போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தது ஹென்லே ஸ்பியர்ஸ் எடுத்த படத்துக்கு கிடைத்தது. அவர், ஸ்காட்லாந்தின் ஷெட்லாந்து தீவு கடலில் கேனட் கடல் பறவையை தனது கேமராவில் பதிவு செய்திருந்தார்.
மூன்றாவது இடம், குஞ்சு பொறித்த அழுங்காமை (Hawksbill) கடலை விட்டு வெளியே வர முதல் முறையாக நீந்தியபோது எடுத்ததற்காக கிடைத்துள்ளது. இதை எடுத்தவர் மேட்டி ஸ்மித்.
The Female Fifty Fathoms விருது - பெருங்கடல் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டும் பெண் கலைஞர்களை ஊக்கமளிக்கும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருது லாஸ் ஏஞ்சலஸை சேர்ந்த உயிரியல் ஆசிரியர் ரெனீ காப்போஸோலாவுக்கு கிடைத்துள்ளது. இவர் பிரெஞ்சு பொலினீசியாவில் சூரிய அஸ்தமனத்தின்போது அலையுடன் சேர்ந்து பயணம் செய்த சுறா மீனை தமது கேமராவில் பதிவு செய்திருந்தார்.
இளம் பெருங்கடல் புகைப்பட கலைஞருக்கான விருது ஹன்னா லி லியூவுக்கு கிடைத்தது. இவர் ஆஸ்திரேலியாவின் ஹெரோன் தீவில் இரைக்காக வானில் வட்டமடித்த கழுகுகளுக்கு கீழே கடலில் காற்றை சுவாசிக்க மேலெழும்பிய தோணியாமையை பதிவு செய்திருந்தார்.
இந்த படங்கள் லண்டனில் டவர் பிரிட்ஜ் அருகே தேம்ஸ் நதிக்கரையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி அக்டோபர் 17ஆம் தேதிவரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.
எல்லா படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
பிற செய்திகள்:
- இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா? சர்வதேச அரங்கில் இனி என்ன நடக்கும்?
- குத்தி கொலை செய்யப்பட்ட பாலின தொழிலாளியின் பெயரை பெல்ஜியம் ஒரு சாலைக்கு வைப்பது ஏன்?
- பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
- கொரோனா தடுப்பு மருந்துக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றமா? – விரிவான ஆய்வுக்கு கோரிக்கை
- முக்கியமான ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்: ஆக்கஸ் எதிரொலியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்