பிட்காயின் மதிப்பு கிடுகிடு உயர்வு: அமேசானுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

காணொளிக் குறிப்பு, பிட்காயின் மதிப்பு கிடுகிடு உயர்வு: அமேசானுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

பிட்காயின் டிஜிட்டல் நாணயத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நபர் வேலைக்குத் தேவை என அமேசான் நிறுவனம் அறிவித்த பிறகு, சில பிட்காயின்களின் மதிப்பு உயர்ந்துள்ளது.

அமேசான் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் விதத்தை மேற்பார்வையிட, `டிஜிட்டல் நாணயம் மற்றும் பிளாக்செயின் மேலாளர்` வேலைக்குத் தேவை என அமேசான் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், பிட்காயின் மதிப்பு கடந்த திங்கட்கிழமை நாணயத்திற்கு, 29 ஆயிரம் டாலர்களிலிருந்து 39 ஆயிரம் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதேரேம், டோஜ்காயின் போன்ற டிஜிட்டல் நாணயத்தின் மதிப்பும் உயர்ந்துள்ளது.

ஊகங்கள் இருந்தபோதிலும், கிரிப்டோ கரன்சிகளை ஏற்றுக்கொள்வதற்கான எந்த திட்டத்தையும் அமேசான் உறுதிப்படுத்தவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :