You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
1915ல் அண்டார்டிக் கடல் பகுதியில் மூழ்கிய கப்பலை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் விஞ்ஞானிகள்
அண்டார்டிக் கடலை ஆய்வு செய்ய சென்றபோது மூழ்கிய எர்னஸ்ட் ஷாக்லெட்டன் என்ற கப்பலை கண்டுபிடிக்க பெரும் முயற்சி தேவைப்படுகிறதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அண்டார்டிக் தீப்கற்பத்தில் உள்ள வெட்டல் கடலில் இக்கப்பல் 1915ஆம் ஆண்டு 3000 மீட்டர் ஆழத்தில் மூழ்கியது.
அதற்கு முன் சுமார் 10 மாதங்கள் பனிக்கட்டிகளின் இடையே மாட்டிக் கொண்ட இக்கப்பல், கடலில் மிதந்த ஒரு மிகப்பெரிய பனிக்கட்டியால் உடைக்கப்பட்டு, கடலுக்கு அடியில் மூழ்கியது. அதில் இருந்த நபர்கள் சிலர் உயிர் காக்கும் படகுகளிலும், நடந்தும் கரை வந்து சேர்ந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
நொறுங்கிப் போன இந்தக் கப்பலை தேடி கண்டுபிடிக்க பல முறை முயற்சி மேற்கொள்ளப்படும் அதில் தோல்வியிலேயே முடிந்தது.
கடலுக்கு அடியில் கப்பல் நொறுங்கியிருக்கும் பகுதிக்கு மேலே உள்ள பனி எப்போதும் மிகவும் தடிமனாக இருக்கிறது என்று இதனை கண்டுபிடிக்க முயற்சித்தக் குழு தெரிவித்துள்ளது.
சரியான இடத்தை கண்டறிய நெருங்குவதற்கு கூட பெரும் முயற்சி தேவைப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
“கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோதி உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்”
கொரோனா சவால் முறியடிப்பதில் ஜனநாயக செயல்பாட்டில் இந்தியா ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. தன் சக அமைச்சர்களுடன், இதில் பிரதமர் நரேந்திர மோதி வழிநடத்திச் செல்கிறார். மக்களின் முழுமையான ஆதரவுடன் முடக்கநிலை அமல் மற்றும் சமூக இடைவெளி பராமரித்தலை வெற்றிகரமாக அவர் செயல்படுத்தியுள்ளார்.
1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட பெரிய நாட்டில், 18 ஆயிரத்துக்கும் சற்று அதிகமானவர்கள் மட்டுமே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தன்னிச்சையான அல்லது சர்வாதிகாரத்தனமான நடவடிக்கைகள் எதையும் மோதி எடுக்கவில்லை.
விரிவாக படிக்க : “கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோதி உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்”
கொரோனா வைரஸ்: கடும் நெருக்கடியில் வங்கதேச ஆடை தயாரிப்புத்துறை
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக வங்கதேசத்தில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் மிகுந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதில் ஈடுபட்டுளள 4 மில்லியன் தொழிலாளர்களில், பாதி பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டாக்காவின் புறநகர்ப் பகுதியில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் சபீனா அக்தர் வேலை பார்க்கிறார். ஐரோப்பிய சந்தைக்கு சட்டைகளை தயாரிக்கும் அந்த நிறுவனத்தில் 800 பேர் வேலை பார்க்கின்றனர்.
வியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை
உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 தொற்று, சீனாவுடன் நில எல்லையை பகிர்ந்திருக்கும் வியட்நாம் நாட்டில் மட்டும் பெரும் பாதிப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை.
வியட்நாமின் மக்கள் தொகை சுமார் 9.7 கோடி ஆகும். அங்கு இதுவரை 268 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதுவரை (ஏப்ரல் 23 வரை) ஒரு மரணம் கூட பதிவாகவில்லை.மக்களை ஒன்றுதிரட்டி "கொரோனாவுக்கு எதிரான போரை" அந்நாடு அறிவித்தது.
கோவிட் 19 தொற்றிலிருந்து முழுமையாக குணமாக எவ்வளவு காலம் ஆகும்?
2019ஆம் ஆண்டு இறுதியில் கோவிட் 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உருவானது. ஆனால், இதனால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் இதிலிருந்து குணமாக நீண்ட காலம் ஆகும் என்றே தெரிகிறது.
சரி. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்?
அது அந்தந்த நபரின் உடல்நிலையை பொறுத்தது. கொரோனா தொற்றால் நீங்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை பொறுத்தே அதிலிருந்து குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கூறமுடியும்.
விரிவாக படிக்க : கொரோனா வைரஸ்: முழுமையாக குணமாக எவ்வளவு காலம் ஆகும்?