You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் அணு ஒப்பந்தத்தை டிரம்ப் கைவிடலாம்: அதிபர் மக்ரோங்
இரானோடு வைத்துள்ள சர்வதேச அணு ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைந்திருப்பதற்கு அதிபர் டிரம்பை சம்மதிக்க வைக்க எடுத்த முயற்சிகளில் தான் தோல்வியடையலாம் என்று ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் தெரிவித்திருக்கிறார்.
உள்நாட்டு காரணங்களுக்காக அதிபர் டிரம்ப் தானாகவே இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறலாம் என்று தனக்கு தோன்றுவதாக அமெரிக்காவில் மேற்கொண்ட 3 நாள் பயணத்தின் முடிவில் மக்ரோங் குறிப்பிட்டுள்ளார்.
இரான் அணு ஆயுதங்களை கொண்டிருப்பதை தடை செய்வதை நோக்கமாக கொண்ட இந்த ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் டிரம்ப் முடிவு செய்ய மே மாதம் 12ம் தேதி வரை அவகாசம் உள்ளது.
பைத்தியகாரதனமான ஒப்பந்தம் என்று இதனை கடுமையாக டிரம்ப் விமர்சித்துள்ளார்.
பருவகால மாற்றம் பற்றிய ஒப்பந்தம் மற்றும் இரான் ஒப்பந்தம் உள்பட உலக பிரச்சனைகளில் அமெரிக்க நிலைபாடுகளில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களை விவரிக்க மக்ரோங் இதே மாதிரியான மொழியையே பயன்படுத்தியிருந்தார்.
"குறுகிய காலம் இதனால் பயன் அடையலாம். ஆனால், நீண்டகால அளவில் இது பைத்தியகாரதனமான செயல்" என்று ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களோடு நடத்திய கேள்வி பதில் அமர்வுக்கு பின்னர், செய்தியாளர்களிடம் மக்ரோங் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தார்.
டிரம்புக்கு முந்தைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோடு எட்டிய உடன்பாட்டின்படி, பொருளாதார தடைகளை தணிவடைய செய்வதற்கு பிரதிபலனாக தன்னுடைய சர்ச்சைக்குரிய அணு ஆயுத திட்டத்தை கட்டுப்படுத்த இரான் ஒப்புக்கொண்டது.
இரான் பற்றிய அமெரிக்கா அதிபர் டிரம்பின் மனப்பான்மையை மாற்றுவதை தன்னுடைய அமெரிக்க பயணத்தின் முதன்மை நோக்கமாக மக்ரோங் கொண்டிருந்தார்.
டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை கைவிடக்கூடிய பெரியதொரு ஆபத்துள்ளதை ஒப்புகொள்ளும் நிலையை இந்தப் பயணத்தின் முடிவில் அடைந்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்