ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

விலைவாசி உயர்வுக்கு இழப்பீடு

செளதி அரேபியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய வரியாலும், எரிபொருள் விலை அதிகரிப்பாலும் அங்கு வாழ்க்கை செலுவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதற்கு இழப்பீடாக அரசு அதிகாரிகளுக்கு செளதி அரேபியா கூடுதல் பணம் வழங்க உள்ளது.

அமெரிக்காவை விமர்சித்த மற்ற நாடுகள்

இரானில் நடக்கும் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக, அவரச ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த அமெரிக்காவை, மற்ற உறுப்பினர் நாடுகள் விமர்சித்துள்ளன.

துண்டிக்கப்பட்ட ஐந்து தலைகள்

மெக்ஸிக்கோவில் போதை மருத்து தொடர்பான வன்முறை அதிகரித்துள்ளது என்பதற்கு அடையாளமாக, தென் கிழக்கு மெக்ஸிக்கோவில் ஒரு காரின் மீது ஐந்து துண்டிக்கப்பட்ட தலைகள் கண்டறியப்பட்டுள்ளது.

வரலாறு காணாத குளிர்

வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவி வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில், வெப்பநிலைகள் -20 டிகிரிக்கும் கீழே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :