You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“வலுவான பிரான்ஸ் உலகத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அவசியமாகிறது" - மக்ரோங்
39வது வயதில் பிரான்சிஸின் இளம் அதிபராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ள இமான்வெல் மக்ரோங், வலுவான பிரான்ஸ் உலகத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அவசியமாகிறது என்று கூறி உலக அளவில் பிரான்ஸின் கெளரவத்தை மீட்டெடுக்க போவதாக உறுதியளித்திருக்கிறார்.
"தங்களிடம் தன்னம்பிக்கை வைப்பதை பிரான்ஸ் மக்களுக்கு திருப்பி கொடுப்பதே தன்னுடைய கடமை என்று எலிசி அரண்மனையில் நடைபெற்ற நீண்டநேர சடங்கிற்கு பிறகு, அதிபர் மக்ரோங் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் சீர்திருத்தப்பட்டு, மறுபடியும் செயல்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.
ஐந்தாண்டுகள் வேலையில்லா திண்டாட்டம் உயர்வாக காணப்பட்ட காலத்தில் ஆட்சி புரிந்த பிரான்சுவா ஒலாந்திற்கு அடுத்ததாக மக்ரோங் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
இரண்டாம் சுற்று அதிபர் தேர்தலில் போட்டியாளரான மரீன் லெ பென்னை 66 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியடைய செய்த ஒரு வாரத்திற்கு பின்னர், இமான்வெல் மக்ரோங் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு முன்னால் எந்த தேர்தலிலும் போட்டியிடாதவர் மக்ரோங். ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய முன்னாள் முதலீட்டு வங்கியாளரான இமான்வெல் மக்ரோங் நாட்டின் அரசியல் ஒழுங்கை சீர்திருத்தி அமைத்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துணர்வூட்ட போவதாக உறுதி அளித்திருக்கிறார்.
அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சடங்கின்போது, பாரிஸ் முழுவதும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தக்குதலுக்கு பின்னர், பிரான்ஸ் அவசரநிலையில் உள்ளது. நகரிலுள்ள பெரும்பகுதி காலை முழுவதும் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது.
“உலகத்திற்கு பிரான்ஸ் தேவை”
மக்ரோங் பதவியேற்பின்போது ஆற்றிய ஏற்புரையில், தங்களுடைய நாட்டின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மீட்டெடுக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
"நமது சமூகத்திலுள்ள பிளவுகளும், பிரிவினைகளும் முடிவடைய வேண்டும்” என்று மக்ரோங் கூறியிருக்கிறார்.
"சுதந்திரம் மற்றும் ஒற்றுமையை உரக்க ஒலிக்கின்ற முந்தைய பிரான்ஸை விட, வலுவான பிரான்ஸ் உலகத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அவசியமாகிறது" என்று அவர் கூறினார்.
"பிரான்சிஸின் அதிகாரம் குறைந்து கொண்டிருக்கிறது என்பதல்ல, மிக பெரியதொரு மறுமலர்ச்சியின் விளிம்பில் இருக்கிறோம் என்று மெய்ப்பித்து மக்களை நம்ப வைப்பேன்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
படையணியின் மாரியாதைக்குரிய கிராண்ட் மாஸ்டர் (வழக்கமாக பிரான்சில் தலைவருக்கு வழங்கப்படும் பணிப்பொறுப்பு) என்ற பதவியின் அடையாளமாக கருதப்படுகின்ற, முன்பு முதலாம் நெப்போலியன் அணிந்த நெக்லஸ் மக்ரோங்கிற்கு வழங்கப்பட்டது.
இந்த சடங்கு தொடங்குவதற்கு முன்னர், அதிபராக பணிபுரிந்து செல்கின்ற பிரான்சுவா ஒலாந்துடன் மக்ரோங் ஒரு மணிநேரம் செலவிட்டார். சோஷலிசக் கட்சியை சேர்ந்த பிரான்சுவா ஒலாந்த், பிரான்ஸின் அணுசக்தி ஆயுத தொகுதிகளின் குறியீடுகளை புதிய அதிபரிடம் வழங்கினார்.
முதலில் ஆலோசகராகவும், பின்னர் பொருளாதார அமைச்சராகவும் நியமித்து புதிதாக பதவியேற்றுள்ள அதிபரை அரசியல் பணியில் ஈடுபட தொடங்கி வைத்தவர் பிரான்சுவா ஒலாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் மீது கருத்து திருட்டு குற்றச்சாட்டு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்