You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒசாமா பின்லேடனின் மகனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது அமெரிக்கா
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இப்போது தன்னுடைய 20 ஆம் வயதுகளில் இருக்கின்ற ஹம்ஸா, 2015 ஆம் ஆண்டு அல் கயிதாவின் அதிகாரபூர்வ உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.
அவடைய தந்தை ஒசாமாவுக்கு பின்னால், உருவாகும் அல் கயிதாவின் தலைவராக பார்க்கப்படுகிறார்.
அதுமுதல், மேற்குலக தலைநகர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த ஹம்ஸா அழைப்பு விடுத்து வருகிறார்.
"ஹம்சா பின்லேடன் தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்" என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதாக அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.
அமெரிக்க நிறுவனங்களோடு விபாரங்களையும், அமெரிக்காவில் நில உடைமைகளை கொண்டிருப்பதற்கும் ஹம்சா இந்த அதிகாரபூர்வ தடை தடுக்கும்.
"கவர்ருகின்ற, பிரபல தலைவர்"
முன்னாள் அல் கயிதா தலைவர் ஒசாமா பின்லேடன் மற்றும் பாகிஸ்தானின் அப்போதாபாத் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தாக்குதலின்போது பிடிபட்ட ஒசாமாவின் மனைவியரில் ஒருவரான காரியா சபாரின் மகன் தான் ஹம்ஸா.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட இந்த அதிரடி தாக்குதல் நடைபெற்றபோது, ஹம்ஸா பெற்றோரோடு இல்லை.
எகிப்திய ஜகாதி தீவிரவாத குழுவை நிறுவுவதற்கு உதவிய கண் அறுவை சிகிச்சை நிபுணரான ஐமான் அல்-ஸாவாஹிரி, ஒசாமாவின் இறப்புக்கு பின்னர் அல் கயிதாவின் தலைவரானார்.
ஹம்ஸா அல் கயிதாவுக்கு புதிய முகத்தை அளித்திருப்பதாகவும், அவர் அனைவரையும் கவர்கின்ற பிரபலமான தலைவராக விளங்குவதாகவும், ஆகஸ்ட் மாதம் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் வல்லுநரான பேராசிரியர் ஃபவாஸ் கெர்கஸ், பிபிசியின் ரேடியோ 4-இல் தெரிவித்தார்.
"அவருடைய தந்தையால் மிகவும் நேசிக்கப்பட்டவரான ஹம்ஸா இருந்தார். அனைவரும் கடந்த பத்தாண்டுகளான தந்தைக்கு பின்னர் மகன் ஹம்ஸா தலைவராக வருவதை பற்றி பேசி வந்துள்ளனர்"
ஒசாமாவின் மகன் அல் கயிதாவின் எதிர்காலமா?
2015 ஆம் ஆண்டு, ஹம்ஸாவின் ஒலிப்பதிவு செய்தியை அல் கயிதா வெளியிட்டது.
அதில், காபூல், பாக்தாத் மற்றும் காஸா ஜிகாதிகள் அல்லது புனித பேராளிகளாக இருக்கின்ற அல் கயிதாவின் உறுப்பினர்கள், வாஷிங்டன், பாரிஸ், டெல் அவிவ் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பையும் அல்லது அமெரிக்க மக்களின் பாதுகாப்பையும் அச்சுறுத்துகின்ற "சர்வதேச பயங்கரவாதி"-களின் அமெரிக்க பட்டியலில் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் சாத்-துடன் ஹம்ஸாவும் இணைந்துள்ளார்.
இந்த தடையை "ஒரு வலிமையான கருவி" என அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
தடை விதிக்கப்பட்ட ஏனைய ஆயிரக்கணக்கானோருடன், அயர்லாந்து குடியரசு படை முதல் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினர் வரை தனி நபர்கள் மற்றும் குழுக்கள் இந்த பட்டியலின் கீழ் வருகின்றனர்.