ட்விட்டர், அமேசான் நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தின் மீது தொடர் இணைய வழி தாக்குதல்

இணையத்தில் பிரபலமான பேபால், ட்விட்டர் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு முக்கிய சேவை அளித்துவரும் அமெரிக்காவை சேர்ந்த இணையதள நிறுவனம் தொடர் இணைய தாக்குதல்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.

டின் என்றழைக்கப்படும் அந்த நிறுவனம், 12 மணி நேரத்தில் தனது சேவைகளில் மூன்று முறை டிடிஓஎஸ் தாக்குதல் எனப்படும் சேவை விநியோகம் மறுப்பு காரணமாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

தகவல்கள் மூலம் நிறுவனங்களின் அதிக சுமை ஏற்றும் நோக்கில், பல லட்சக்கணக்கான தனியார் ரவுட்டர்கள் மற்றும் கருவிகள் தீங்கிழைக்கும் மென்பொருள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க இணையதளங்களை ஊடுருவதை நிறுத்தக்கோரி பிரச்சார குழுவான விக்கிலீக்ஸ் அதன் ஆதரவாளர்களிடம் கேட்டுள்ளது.

ஆனால், இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பது யார் என்பது இதுவரை தெரியவில்லை.

இதுகுறித்து அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் விசாரித்து வருகிறது.