சீன வழக்கறிஞர் ஸியா லினுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

சீனாவின் கருத்து முரண்படும் கலைஞர் ஆய் வெய்வெய் உட்பட பல கட்சிக்காரர்களை கொண்ட ஒரு சீன வழக்கறிஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ஸியா லின் மோசடியாக அவரது சூதாட்ட கடன்களை ஈடுகட்ட, 15 மில்லியன் டாலர்கள் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார் .

அவரது மனைவி மற்றும் ஆதரவாளர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளனர்.

மற்றும் அவர் அரசாங்கத்திற்கு சவாலாக இருப்பதால் துன்புறுத்தப்பட்டதாக கூறினர்.

சீனாவில் மனித உரிமை ஆர்வலர்கள் நீண்ட காலமாக அதிகாரவர்கத்தின் வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சமீப மாதங்களில் அவர்களின் சட்ட பிரதிநிதிகள் அதிக அளவில் இலக்கு வைக்கப்படுகிறார்கள்.

ஸியா லின் மேல்முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளார்.