டெல்லி கலவரம் மற்றும் பீமா கோரேகாவ் வன்முறை
விஷயம் இரண்டு - முறை ஒன்று

நாட்டின் இரண்டு பகுதிகளில் வெவ்வேறு காலங்களில் இரண்டு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. முதலாவது சம்பவம், 2018, ஜனவரி 1 ஆம் தேதி புணேவுக்கு அருகிலுள்ள பீமா கோரேகாவ் பகுதியிலும், இரண்டாவது சம்பவம் 2020, பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்தன. பீமா கோரேகாவ் வழக்கு தலித் இயக்கத்துடன் தொடர்புடையது, டெல்லி கலவரம், சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பானது.
2 சம்பவங்களும் ஒரே காரணத்துக்காக விவாதப்பொருளாயின. 2 வழக்குகளிலும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, கைதுகள் செய்யப்பட்டுள்ளன, 2 நிகழ்வுகளிலும் நீண்ட காலமாக காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பிரிவில் இருந்து வந்தவர்கள் - அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் மாணவர் தலைவர்கள். அவர்களிடையே பொதுவான மற்றொரு விஷயம் என்னவென்றால், அவர்கள் இந்துத்துவ அரசியல், சிஏஏ-என்ஆர்சி, தலித்-சிறுபான்மை ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் எதிர்ப்பாளர்களாக இருந்தனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும், புகார்கள் இருந்தபோதிலும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தவர்கள், இந்துத்துவ அரசியலுடன் தொடர்புடையவர்கள்.
பல மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் சர்வதேச அளவில் பிரபலம் ஆன மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அறிவுஜீவிகள் அடங்குவர். அவர்களில் பலர் பல தசாப்தங்களாக புகழ் பெற்றவர்களாக, நன்கு அறியப்பட்டவர்களாகவும் உள்ளனர், அதே நேரத்தில் டெல்லி வழக்கில் கடும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பல இளம் மாணவர் தலைவர்களும் ஜவாஹர் லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கல்வி அமைப்புக்களுக்கும், அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. மகளிர் விடுதிகளில் வசிப்போருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடங்கிய 'பிஞ்ச்ரா தோட்' (கூண்டை உடை) பிரசாரம் தொடர்பாக 2 பெண் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்..

அரசாங்க புலனாய்வு அமைப்புகள் இவர்களை “வன்முறை, நக்சலைட் சார்பு மற்றும் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள்” என்று அழைக்கின்றன. அவர்களில் பெரும்பாலோர் சட்டவிரோத செயல்பாடுகள் தடை சட்டத்தின் (யுஏபிஏ) பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர், இது பெரும்பாலும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் மீது பிரயோகிக்கப்படும். இவர்கள் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன, எனவே அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படக்கூடாது என்று அவை வலியுறுத்துகின்றன. யுஏபிஏ பிரிவுகளின்கீழ் விசாரணை அமைப்புகள், வழக்கு பதிவு செய்யாமலேயே கைது செய்யப்பட்டவர்களை நீண்ட காலத்துக்கு காவலில் வைக்கமுடியும்.
பீமா கோரேகாவ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதன்பிறகு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் டெல்லி கலவர வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும், விசாரணை அமைப்புகளின் நடுநிலைத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்துத்துவ அரசியலுடன் தொடர்புடையவர்கள், இரண்டு நிகழ்வுகளிலும் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியவர்கள் தெரிவித்தனர்
இருப்பினும், இரண்டு வழக்குகளிலும், குற்றமற்றவர் மற்றும் குற்றமிழைத்தவர் ஆகியவற்றை நீதிமன்றம்தான் தீர்மானிக்க முடியும். இந்த சம்பவங்களில், சட்டரீதியான செயல்பாட்டின் கீழ் இதுவரை என்ன நடந்தது, இருக்கும் ஆவணங்கள், வெளிவந்த உண்மைகள், ஆகியவற்றை ஒரே இடத்தில் கொண்டுவரும் முயற்சிதான் இது. இதனால் தொடர்ச்சியாக நடக்கும்சிறிய- பெரிய விஷயங்களைப் பற்றி வாசகர்கள் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். .
டெல்லி கலவரம்
டெல்லி கலவரம் நடந்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் கடந்து விட்டன. டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ-க்கு எதிராக பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை நடந்த போராட்டங்கள் கலவரத்தில் முடிவடைந்தன. அதில் 53 பேர் இறந்தனர். ஜூலை 13-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நகர காவல்துறை அளித்த வாக்குமூலத்தின்படி, இறந்தவர்களில் 40 முஸ்லிம்களும் 13 இந்துக்களும் அடங்குவர்.
இது, வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையம். பிப்ரவரி 22-ஆம் தேதி, சிஏஏ என்ற குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கெடுத்தவர்கள் பெரும்பாலும் பெண்கள். டெல்லி கலவரங்களுடனான அதன் தொடர்பு என்ன என்பதை அடுத்து பார்ப்போம்.
டெல்லி கலவரம்
இதுவரை, டெல்லி காவல்துறை 751 கலவர சம்பவங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது, ஆனால் டெல்லி கலவரம் தொடர்பான ஆவணங்களை வெளிப்படுத்த காவல்துறை மறுத்துவிட்டது.
பல தகவல்கள் சமூக தாக்கத்தை ஏற்படுத்துபவை என்று போலீசார் வாதிடுகின்றனர், எனவே அவற்றை இணையதளத்தில் பதிவேற்ற முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 16-ஆம் தேதி டெல்லி போலீசார் இதை தெரிவித்தனர்.
இத்தகைய சூழ்நிலையில், வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரங்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பது, ஒரு பெரிய சவாலாகும். ஆனால் விசாரணை தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள், குற்றப்பத்திரிகையின் நகல்கள் ஆகியவை அடிப்படையில் விசாரணை முறைகளை புரிந்து கொள்ள பிபிசி முயன்றது.

டெல்லி கலவரத்தில் மொத்தம் 53 பேர் பலி
டெல்லி கலவரத்தில் மொத்தம் 53 பேர் பலி
அவற்றில் மிக முக்கியமானவை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) எண். 59, எஃப்ஐஆர் எண். 65, எஃப்ஐஆர் எண். 101 மற்றும் எஃப்.ஐ.ஆர் எண். 60. இது தவிர, டெல்லி காவல்துறை குற்றப்பிரிவும் ஜூன் மாத தொடக்கத்தில் கட்கார்டூமா நீதிமன்றத்தில், நடந்த கலவரத்தின் பின்னணியில் உள்ள 'காலவரிசை' ஒன்றை முன்வைத்தது
हमले में बुरी तरह घायल मोहम्मद ज़ुबैर की कहानी

எஃப்ஐஆர் எண். 59: மாணவர் தலைவர்கள் மீது
யுஏபிஏ

முதல் விஷயம் எஃப்ஐஆர் எண் 59. கலவரத்தின் பின்னால் ஆழமான சதி நடந்ததாக டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த எஃப்.ஐ.ஆர், அதில் குறிப்பிடப்பட்ட சதித்திட்டம் பற்றியது.

கலவரங்கள் குறித்த எஃப்ஐஆர் ஆன இதில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆவணத்தில், டெல்லியில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்த நன்கு அறியப்பட்ட மாணவர் தலைவர்களின் பெயர்கள் உள்ளன.
மார்ச் 6, 2020 அன்று பதிவு செய்யப்பட்ட அசல் எஃப்ஐஆரில், 2 நபர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன. - ஜேஎன்யூ மாணவர் தலைவர் ஒமர் காலித், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இண்டியா (பி.எஃப்.ஐ) அமைப்புடன் தொடர்புடைய டேனிஷ் ஆகியோரின் பெயர்கள் உல்ளன. “பிஎஃப்ஐ”, தன்னை ஒரு சமூக சேவை அமைப்பு என்று வர்ணிக்கிறது, ஆனால் கேரளாவில் பலவந்த மத மாற்றம் மற்றும் முஸ்லிம்களிடையே தீவிரவாதத்தை ஊக்குவித்ததாக அதன் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இப்போது எஃப்.ஐ.ஆர் 59 பற்றி பேசலாம். தற்போது, இந்த எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சஃபுரா சர்கர், முகமது டேனிஷ், பர்வேஸ் மற்றும் இலியாஸ் ஆகியோர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 பேர் இன்னும் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
சிறப்பு என்னவென்றால், இவர்களில் பெரும்பாலோர் ஆரம்பத்தில் டெல்லி கலவரத்தின் வெவ்வேறு எஃப்.ஐ.ஆர்களில் கீழ் கைது செய்யப்பட்டனர், ஆனால் அவர்கள் ஜாமீன் பெற்றவுடன் அல்லது ஜாமீன் பெறும் சூழல் ஏற்பட்டவுடன், அவர்களின் பெயர் எஃப்.ஐ.ஆர் எண் 59-இல் சேர்க்கப்பட்டது.

அடிப்படை எஃப்.ஐ.ஆர் 59-இல் முதல் பெயர், ஜேஎன்யூ மாணவரும், யுனைட்டட் அகெய்ன்ஸ்ட் ஹேட் என்ற அமைப்பின் இணை நிறுவனருமான ஒமர் காலித்.












முன்னாள் ஜேஎன்யூ மாணவர் தலைவர் கன்ஹையா குமாருடன் 2016, பிப்ரவரியில் உமர் காலித்தின் பெயர் முதலில் செய்தியில் அடிபட்டது.
கலவர சதி மற்றும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் அனைவரும் வெவ்வேறு மற்றும் குறைவான கடுமையான குற்றச்சாட்டுகள் கொண்ட எஃப்.ஐ.ஆர்களில் எவ்வாறு கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்கள் யுஏபிஏவின் எஃப்ஐஆர் எண் 59 இன் ஒரு பகுதியாக மாறியது எப்படி?
காலித் சைஃபி - யுனைட்டட் அகெய்ன்ஸ்ட் ஹேட்
இஷ்ரத் ஜஹான் - முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர்
சஃபுரா சர்கர்-எம்ஃபில் மாணவர், ஜாமியா
மீரன் ஹைதர்- பிஏடி மாணவர், ஜாமியா
.குல்பிஷா கட்டூன் - எம்பிஏ மாணவர், காஜியாபாத்
சதாப் அகமது - ஜாமியா மாணவி
ஷிஃபா-உர்-ரஹ்மான் - ஜாமியா முன்னாள் மாணவர்
நடாஷா நர்வால் - ஜே.என்.யூ மாணவர், கூண்டு உடை உறுப்பினர்
தேவங்கன கலிதா - ஜே.என்.யூ மாணவர், கூண்டு உடை உறுப்பினர்
ஆசிப் இக்பால் தன்ஹா - ஜாமியா மாணவர்
தாஹிர் உசேன் - முன்னாள் ஆப் கட்சி கவுன்சிலர்
இந்த முழு நடவடிக்கை பற்றியும் முழுமையாக புரிந்து கொள்ள, பிபிசி , முதல் எஃப்.ஐ.ஆரிலிருந்து நீதிமன்றத்தில் நடந்த ஒவ்வொரு விசாரணையையும் ஆய்வு செய்தது.
மார்ச் 6 முதல் இப்போது வரை இந்த வழக்கில் என்ன நடந்தது, காவல்துறையின் கூற்று என்ன, ஜாமீன் மனுவை நீதிமன்றம் எப்போது தள்ளுபடி செய்தது, 2 பேர் என பெயரிடப்பட்ட இந்த எஃப்.ஐ.ஆரில் 14 பேர் எவ்வாறு கைது செய்யப்பட்டனர்
ஜே.என்.யூ மாணவரும்,யுனைடெட் அகெய்ன்ஸ்ட் ஹேட்டின் உறுப்பினருமான உமர் காலித் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இண்டியா உறுப்பினரான முகமது டேனிஷ் ஆகியோரின் பெயர்கள் எஃப்.ஐ.ஆர். ல் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு எஃப்.ஐ.ஆர் படி, உமர் காலித் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, கலவரத்தை தூண்ட சதி செய்தார். டேனிஷ் கலவரங்களுக்காக மக்களை அணிதிரட்டினார்.
முதல் எஃப் ஐ ஆர் நகலில், ஐபிசி பிரிவுகள் --- 147 (கலவரத்தைத் தூண்டுதல்), 148 (கலவரங்களில் கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்துதல்), 149 (சட்டவிரோத கூட்டம் நடத்தல்) 120 பி (குற்றச் சதி) போடப்படிருந்தன. இவை அனைத்தும் ஜாமீன் பெறக்கூடியவை..
இந்த வழக்கில், மொஹம்மத் டேனிஷ் உட்பட மூன்று பிஎஃப் ஐ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நாட்டைவிட்டு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன், மார்ச் 13 ம் தேதி பெருநகர மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. இந்த வழக்கை குற்றப்பிரிவு பதிவு செய்திருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு இந்த வழக்கின் விசாரணை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
சதி, பயங்கரவாத நடவடிக்கை போன்ற கடும் குற்றங்களை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரிக்கிறது. இந்த பிரிவின் தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கிறார்.
மார்ச் 15 அன்று, இந்த வழக்கில் 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 124 ஏ (தேசத்துரோகம்) போன்ற ஜாமீன் அல்லாத பிரிவுகள் சேர்க்கப்பட்டன. மேலும் 154 ஏ (சட்டவிரோத குட்டம்), 186 (ஒரு அரசு ஊழியரின் பணிக்கு இடையூறு விளைவித்தல்), 353, 395 (கொள்ளை), 435 (தீவிபத்து அல்லது வெடிப்பால் தீங்கு விளைவித்தல்), பொது சொத்து சேதம் தடுப்பு சட்டத்தின்பிரிவு 3, 4 மற்றும் ஆயுதங்கள். சட்டத்தின் 25 மற்றும் 27 பிரிவுகளும் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டன.
இந்த வழக்கில் ஏப்ரல் 19-ஆம் தேதி, மிகவும் கடுமையான யூஏபிஏ பிரிவுகளான 13 (சட்டவிரோத நடவடிக்கைக்கு தண்டனை), 16 (பயங்கரவாத நடவடிக்கைக்கு தண்டனை), 17 (பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி திரட்டியதற்காக தண்டனை) மற்றும் 18 (சதித்திட்டம் தீட்டியதற்கான தண்டனை) சேர்க்கப்பட்டது.
பொதுவாக, எந்தவொரு எஃப்.ஐ.ஆரில், 90 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும், ஆனால் எஃப்.ஐ.ஆர் 59 இல், யுஏபிஏ 43 டி (2) ஐப் பயன்படுத்தி சிறப்புப்பிரிவு, செப்டம்பர் 17 வரை நேரம் கோரியது, ஆனால் அமர்வு நீதிபதி தர்மேந்திர ராணா வின் நீதிமன்றம் ,ஆகஸ்ட் 14 வரை மட்டுமே நேரம் வழங்கியது. அதாவது காவல்துறைக்கு குற்றப்பத்திரிகை தயாரிக்க 120 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
யுஏபிஏவில், 90 நாட்கள் கால அவகாசத்தை 180 நாட்கள் வரை நீட்டிக்கலாம், ஆனால் இதைச் செய்ய, விசாரணை அதிகாரி நீதிமன்றத்திற்கு முன்பாக கூடுதல் நேரம் எடுப்பதற்கான காரணங்களைக் கூற வேண்டும், மேலும் மனுவை நீதிமன்றம்ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சர்ச்சைக்குரிய விதத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்..


ஒரு வழக்கில் ஜாமீன் அளிக்கப்பட்டு மீண்டும் எஃப்ஐஆர் 59-இன் கீழ் கைதான
காலித் சைஃபி: வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர். யுனைடெட் அகெய்ன்ஸ்ட் ஹேட் என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர்.
2017 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு, கும்பல் கொலைக்கு எதிராக ஒரு பிரசாரத்தை தொடங்கியது. நகரும் ரயிலில் ஜுனைத் என்ற சிறுவன் கொல்லப்பட்ட பின்னர் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் பலர் இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காலித் மாறினார். இது தவிர, நாடு முழுவதும் நடந்த பல சம்பவங்களை காலித் முன்னெடுத்து பிரச்சாரம் செய்தார்.

2020, 26 பிப்ரவரி அன்று காலித் சைஃபியை ஏற்றிச் சென்ற போலீசார்
2020, 26 பிப்ரவரி அன்று காலித் சைஃபியை ஏற்றிச் சென்ற போலீசார்
காலித் சைஃபி கடந்த நான்கு மாதங்களாக மண்டோலி சிறையில் உள்ளார். அவர் முதலில் பிப்ரவரி 26 அன்று எஃப்.ஐ.ஆர் எண் 44 இல் கைது செய்யப்பட்டார். குரேஜியில் நடந்து வரும் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது காலித் சைஃபி, இஷ்ரத் ஜஹான் மற்றும் சாபு அன்சாரி சட்டவிரோதமாக அணிதிரட்டியதாகவும், போலீஸ் உத்தரவுகள் மற்றும் போலிஸ் படை இருந்தபோதிலும் கூட்டத்தை வெளியேறுவதைத் தடுத்ததாகவும், கல்லெறிய தூண்டியதில் போலீஸ்காரர்கள் காயமுற்றதாகவும் எஃப்ஐஆர் 44 கூறியது.
இந்த எஃப்.ஐ.ஆரில், ஐபிசி 307 (கொலை நோக்கத்துடன் தாக்குதல்) மற்றும் ஆயுத சட்டத்தின் பிரிவுகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
மார்ச் 10 அன்று, ஒரு விடியோ வெளிவந்தது, அதில் காலித் சைஃபி போலீஸ் காவலில் இருந்தபின் முதல் முறையாக கர்கார்டூமா நீதிமன்ற வளாகத்தில்தோன்றினார். இந்த நேரத்தில், அவரது இரண்டு கால்களும் உடைந்திருந்தன, வலது கையின் விரல்களும் உடைந்திருந்தன. அவர் சக்கர நாற்காலியில் இருந்தார். பிப்ரவரி 26 அன்று ஒரு வீடியோவும் வெளிவந்தது. அதில் காலித் காவல்துறையினருடன் நடந்து கொண்டிருந்தார், அதாவது அவர் காவலில் இருந்தபோது அவரது கால்கள் உடைந்தன.
எஃப்.ஐ.ஆர் 44-இல் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மார்ச் 21 அன்று, இந்த வழக்கில் காலித் சைஃபி தவிர மற்ற அனைத்து குற்றவாளிகளும் கர்கர்டூமா நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்றனர். சைபியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பதின் பருவ சிறுவன் ஒருவன் தனது வாக்குமூலத்தில், காலித் சைபியால் தனக்கு நாட்டு துப்பாக்கி வழங்கப்பட்டதாகவும், காவல்துறையினரைத் தாக்க அவர் தன்னை தூண்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போலிஸ் காவலில் காலித் கடுமையாக தாக்கப்பட்டதாக சைஃபிக்கு ஆஜரான வக்கீல் ரெபேக்கா ஜான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வாதங்கள் இருந்தபோதிலும், நீதிபதி மஞ்சுஷா வாத்வா நீதிமன்றம் ,அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

காலித் சைஃபி கால்கள் உடைந்த நிலையில் சக்கர நாற்காலியில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்
காலித் சைஃபி கால்கள் உடைந்த நிலையில் சக்கர நாற்காலியில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்
அதே நாளிலேயே, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, காலித் சைஃபியின் பெயரை எஃப்.ஐ.ஆர் 59 இல் சேர்த்தது. டெல்லி கலவரம் தொடர்பான வழக்குல்,மூன்று பிரிவுகள் 44, 59, 101 ஆகியவற்றில் காலித் சைஃபியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இஷ்ரத் ஜஹான்

இஷ்ரத் ஜஹான் ஒரு வழக்கறிஞர் மற்றும் கவுன்சிலராக இருந்துள்ளார்
இஷ்ரத் ஜஹான் ஒரு வழக்கறிஞர் மற்றும் கவுன்சிலராக இருந்துள்ளார்
தொழிலில் ஒரு வழக்கறிஞரும் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலருமான இஷ்ரத் ஜஹான் காலித் சைஃபியுடன் பிப்ரவரி 26 அன்று கைது செய்யப்பட்டார். மார்ச் 21 அன்று எஃப்.ஐ.ஆர் எண் 44 இல் இஷ்ரத் கர்கர்டூமா நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார், ஆனால் அதே நாளில் அவர் விடுதலையாவதற்கு முன்பு, டெல்லி கலவரத்தின் சதி தொடர்பான எஃப்.ஐ.ஆர் 59 இல், சிறப்பு பிரிவு அவரை திஹார் சிறையில் கைது செய்தது, மேலும் அவர் மீது யுஏபிஏ பிரிவுகளும் சுமத்தப்பட்டன.
ஜாமீன் மனுவை இஷ்ரத் ஜஹான் இரண்டு முறை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் யுஏபிஏ விதிக்கப்பட்டுள்ளதால், அமர்வு நீதிமன்றத்திற்கு ஜாமீன் வழங்க உரிமை உண்டு, பெருநகர மேஜிஸ்ட்ரேட் அதில் ஜாமீன் வழங்க முடியாது. இதன் பின்னர், மே 30 அன்று, அமர்வு நீதிபதி தர்மேந்திர ராணா அவருக்கு 10 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கினார்.
ஜாமீன் காலம் ஜூன் 10 ஆம் தேதி தொடங்கியது, அவரது திருமணத்திற்காக இந்த ஜாமீன் வழங்கப்பட்டது மற்றும் ஜூன் 19 அன்று ஜாமீன் முடிந்தது. இருப்பினும், இஷ்ரத்தின் வழக்கறிஞர் லலித் வலேச்சா, பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இருந்து ஏழு நாள் நீட்டிப்பு கோரியிருந்தார், அதை நீதிபதி நிராகரித்தார். இந்த நேரத்தில் இஷ்ரத், திஹார் சிறையில் உள்ளார்.
சஃபூரா ஜர்கர்

பல முயற்சிகளுக்குப் பிறகு சஃபூரா ஜர்கருக்கு ஜாமீன் கிடைத்தது
பல முயற்சிகளுக்குப் பிறகு சஃபூரா ஜர்கருக்கு ஜாமீன் கிடைத்தது
27 வயதான சஃபூரா, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் மாணவர். ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் (ஜே.சி.சி) ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். ஜே.சி.சி, பி.எஃப்.ஐ, பிஞ்ச்ரா தோட், யுனைடெட் அகைன்ஸ்ட் ஹேட் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் டெல்லியில் கலவரங்களுக்கு சதி செய்ததாக சிறப்பு ப்பிரிவு கூறுகிறது.
சஃபுராவின் கைது மிகவும் பேசப்பட்டது மற்றும் இதற்கு மிகப்பெரிய காரணம் அவர் கர்ப்பவதியாக இருந்தது. சஃபுராவைக் கைது செய்வதிலும் இதே மாதிரியான பேட்டர்ன் காணப்படுகிறது. பிப்ரவரி 10 ம் தேதி ஜாபராபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் 48-இன் கீழ், சஃபுரா ஏப்ரல் 10 ஆம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டார், பின்னர் அவர் பின்மாலைப்பொழுதில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஏப்ரல் 13 அன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் விடுவிக்கப்படுவதற்கு பதிலாக, சஃபுரா மார்ச் 6 இன் எஃப்ஐஆர்-59 இன், கீழ் கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர், ஏப்ரல் 18 ஆம் தேதி சஃபுராவின் ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டது, இந்த நேரத்தில் சஃபுரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த கூடுதல் தகவலுடன் ஏப்ரல் 21 ஆம் தேதி மீண்டும் வருமாறு மாஜிஸ்திரேட், டெல்லி போலீசை கேட்டுக் கொண்டார். ஏப்ரல் 21 விசாரணைக்கு சற்று முன்பு, ஏப்ரல் 19 அன்று, இந்த வழக்கில் சிறப்பு பிரிவு, யூஏபிஏ சட்டப்பிரிவுகளை சேர்த்த்து. இதன் பின்னர் சஃபுராவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜாமீன் மனு 3 முறை நிராகரிக்கப்பட்ட பின்னர், சஃபுரா ஜர்கருக்கு ஜூன் 23 அன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் 'மனிதாபிமான அடிப்படையில்' ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கு முன் 3 முறை, 'மனிதாபிமான அடிப்படையில்' சஃபுரா சர்கர் கோரியிருந்த ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த விவகாரம் ஜூன் 22 அன்று உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, டெல்லி போலீசார், "கடந்த 10 ஆண்டுகளில் 39 குழந்தைகள் திகார் சிறையில் பிறந்திருக்கிறார்கள்" என்று கூறியது. ஆனால் டெல்லி காவல்துறை சார்பில் ஒரு நாள் கழித்து ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "சஃபுராவுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டால் இதனால் மத்திய அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்று கூறினார்.
ஒரு நாள் முன்னதாக, டெல்லி காவல்துறை தரவைப் பயன்படுத்தி, சிறையில் குழந்தை பிறக்கும் சாத்தியக்கூறு குறித்து தனது கருத்தை தெரிவித்தது. கூடவே, “மனிதாபிமான அடிப்படை” என்று குறிப்பிடப்பட்டிருந்த ஜாமீன் மனுவையும் எதிர்த்தது. ஆனால், 24 மணி நேரத்தில் என்ன நடந்தது? இந்த மனுவை காவல்துறை ஏன் எதிர்க்கவில்லை? சஃபுரா சர்கர் கைது செய்யப்பட்டது குறித்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, மேதா பட்கர், அருணா ராய் போன்ற பெண்கள் பிரபலங்கள் ஆட்சேபம் தெரிவித்தனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.


மீரான் ஹைதர்

மீரான் ஹைதர் ஜாமியாவில் இருந்து பிஹெச்டி செய்கிறார்
மீரான் ஹைதர் ஜாமியாவில் இருந்து பிஹெச்டி செய்கிறார்
மீரன் ஹைதர் ஜாமியாவில் பிஹெச்டி மாணவர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) டெல்லி பிரிவின் மாணவர் அணி தலைவர் ஆவார். ஜாமியாவின் கேட் எண். 7-இல் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் மீரான் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார். 35 வயதான மீரான், ஏப்ரல் 1 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதன் பின்னர், ஏப்ரல் 3 ஆம் தேதி, அவர் காவலில் வைக்கப்பட்டார்.
மீரானின் வக்கீல், ஏப்ரல் 15 அன்று, ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் சிறப்புப்பிரிவு கடுமையான பிரிவுகளை சேர்த்துள்ளது என்று அவருக்கு தெரியவந்தபோது, அவர் மனுவை திரும்பப்பெற்று, அதிக ஏற்பாடுகளுடன் மீண்டும் மனுதாக்கல் செய்ய முடிவுசெய்தார். மீரான், இப்போதும் நீதித்துறை காவலில் உள்ளார்.
குல்பிஷா பாத்திமா

குல்ஃபிஷா காசியாபாத்தில் இருந்து எம்பிபிஏ படித்தார்
குல்ஃபிஷா காசியாபாத்தில் இருந்து எம்பிபிஏ படித்தார்
28 வயதான குல்பிஷா பாத்திமா காசியாபாத்தில் இருந்து எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். டெல்லியில் நடந்து வரும்சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அவர் தவறாமல் கலந்து கொண்டிருந்தார். ஏப்ரல் 9 ம் தேதி, சஃபுரா ஜர்கரைப் போலவே, ஜாஃபராபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் எண் 48 இன் கீழ் டெல்லி காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். மே 12 அன்று, இந்த வழக்கில் அவர் அமர்வு நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்றார், ஆனால் அவர் திகார் சிறையில் தங்கியிருந்தபோது எஃப்.ஐ.ஆர் எண் 59 இல் கைது செய்யப்பட்டார். அவர் இன்னும் திகாரில் இருக்கிறார்.
அவரது சகோதரர் அகில் உசேன், குல்பிஷாவின் வழக்கறிஞர் மஹ்மூத் பராச்சாவுடன் சேர்ந்து, ஹைபியஸ் கார்பஸ்( (ஆட்கொணர்வு) மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இருந்தபோதிலும், கூடுதல் நீதிபதி தர்மேந்திர ராணா குல்பிஷாவை ஜூன் 25 வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினார்.
இருப்பினும், உயர்நீதிமன்றத்தில் இருந்து சபுரா ஜாமீன் பெறுவதற்கு ஒரு நாள் முன்பு, நீதிபதி தர்மேந்திர ராணா, கல்பிஷாவின் ஹேபியாஸ் கார்பஸ் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த யுஏபிஏ வின் இந்த வழக்கை விசாரிக்க, என்ஐஏ( தேசிய புலனாய்வு முகமை) வின் சிறப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு ஆனால் இந்த வழக்கில் ரிமாண்ட் உத்தரவு அமர்வு நீதிமன்ற நீதிபதியால் உச்சரிக்கப்பட்டுள்ளது, அது அவர்களின் அதிகார எல்லைக்கு வெளியே உள்ளது என்று கூறி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
யுஏபிஏ வழக்கின் விசாரணை என்ஐஏ நீதிமன்றத்தில் இருந்தால், மத்திய அரசு அத்தகைய உத்தரவை வழங்கியிருக்கும் போது மட்டுமே இது கட்டாயமாகும்.ஆகவே, இந்த வாதம் தவறானது என்று நீதிமன்றம் கூறியது.
ஆசிப் இக்பால் தன்ஹா

தன்ஹாவுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர் மற்றொரு வழக்கில் 2019 டிசம்பரில் பதிவுசெய்யப்பட்டது.
தன்ஹாவுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர் மற்றொரு வழக்கில் 2019 டிசம்பரில் பதிவுசெய்யப்பட்டது.
24 வயதான ஆசிஃப் இக்பால் தன்ஹா பாரசீக மொழி மாணவர். டிஸம்பர் 16-ஆம் தேதி, ஜாமியா நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் 298-ன்கீழ் அவர், மே 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு டிசம்பர் 15-ஆம் தேதி ஜாமியா பல்கலைக்கழக பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் மக்களுக்கும் இடையிலான மோதலுடன் தொடர்புடையது.
மே 20 அன்று, அவரது பெயர் எஃப்.ஐ.ஆர் எண் 59 இல் சேர்க்கப்பட்டது, அதாவது முன்று நாட்களுக்கு முன் மற்றொரு வழக்கில் கைது மற்றும் மூன்று நாட்களுக்குப் பிறகு, 59 சேர்க்கப்பட்டுள்ளது.
மே 28 அன்று, ஆசிஃபுக்கு எஃப்.ஐ.ஆர் 298-இல் அமர்வு நீதிபதி கவ்ரவ் ராவ் ஜாமீன் வழங்கினார், ஆனால் அதற்குள் அவர் யுஏபிஏவின் எஃப்ஐஆர் 59-இல் சேர்க்கப்பட்டார்
எஃப்.ஐ.ஆர் 59 வழக்கில், செஷன்ஸ் நீதிபதி தர்மேந்திர ராணா, ஆசிஃப் இக்பால் தன்ஹாவின் நீதிமன்றக் காவலை ஜூன் 25 வரை நீட்டித்தபோது, "விசாரணை ஒரு திசையில் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. விசாரணை அதிகாரிகளால் அவர்களின் ஈடுபாட்டை நிரூபிக்க என்ன விசாரணை நடந்துள்ளது என்பதை சரியாக சொல்ல முடியவில்லை" என்று அவர் நீதிமன்றத்தில் கூறினார். ஆசிஃப் இன்னும் நீதிமன்ற காவலில் உள்ளார்.
நதாஷா நர்வால் மற்றும் தேவங்கனா கலிதா

தேவங்கனா கலிதா
தேவங்கனா கலிதா
இந்த வழக்கில் நதாஷா மற்றும் தேவங்கனா ஆகியோர் கடைசியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் ஜே.என்.யுவின் மாணவர்கள் மற்றும் பிஞ்ச்ரா தோட் என்ற பெண்ணிய அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். பிஞ்ரா தோட் என்பது டெல்லியில் உள்ள கல்லூரிகளின் பெண் மாணவர்களின் குழு ஆகும், அவர்கள் பெண்களின் சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள். இது கல்லூரி வளாகத்தில் மாணவியர்கள் மீதான பாகுபாடுகளுக்கு எதிராக குரல் எழுப்ப, 2015 ஆம் ஆண்டில் தொடங்கியது.

நதாஷா நர்வால்
நதாஷா நர்வால்
மே 23 அன்று, எஃப்.ஐ.ஆர் 48 இல் தேவங்கனா மற்றும் நதாஷா கைது செய்யப்பட்டனர். ஜாபராபாத் மெட்ரோ நிலையத்தில் வன்முறைக்கு ஒரு நாள் முன்னதாக சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. மே 24 அன்று, பெருநகர மாஜிஸ்திரேட் அஜித் நாராயண் இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கினார், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ க்கு எதிராக மட்டுமே ஆர்ப்பாட்டம் செய்தனர், அவ்வாறு செய்ததால் அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட்டதை நிரூபிக்கவில்லை."என்று அவர் குறிப்பிட்டார்.
அதே நாளில், அவர் இரண்டாவது எஃப்.ஐ.ஆர் 50 இல் கைது செய்யப்பட்டார். டெல்லி கலவரத்தைத் திட்டமிடுவதில் அவர்கள்ள் இருவரும் ஈடுபட்டதாக காவல்துறை தங்களது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில், ஒரு வாட்ஸ்அப் செய்தி அடிப்படையாக மாற்றப்பட்டு இவ்வாறு தலைப்பிடப்பட்டுள்ளது - "கலவரம் ஏற்படும் சூழலில் வீட்டின் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?"
இதன் பின்னர், மே 29 அன்று, நதாஷா நர்வால் எஃப்.ஐ.ஆர் 59 இல் கைது செய்யப்பட்டார், அதாவது அவர் யுஏபிஏ பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டார்
மறுபுறம், தரியா கஞ்ச் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான வன்முறை வழக்கில் மே 30 அன்று தேவங்கனா கலிதா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் 20 டிசம்பர் 2019 அன்று நடந்தது. இதில், அவர் கலகத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு அரசாங்க அதிகாரி கடமையைச் செய்வதைத் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்,
ஜூன் 2-ஆம் தேதி, இந்த வழக்கிலும், மாஜிஸ்திரேட் அபிநவ் பாண்டே தேவங்கனாவுக்கு ஜாமீன் வழங்கினார், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு அரசு ஊழியரை தாக்கியதாக நேரடி ஆதாரங்கள் இல்லை" என்று கூறினார். சிசிடிவி காட்சிகள், குற்றம்சாட்டப்பட்டவர் வன்முறையில் ஈடுபட்டிருப்பதைக் காட்டவில்லை. தொலைபேசி, மடிக்கணினியில் இதுபோன்ற எதுவும் கிடைக்கவில்லை."
ஆனால் இதற்குப் பிறகு, ஜூன் 5 ஆம் தேதி, சிறப்புப்பிரிவு எஃப்.ஐ.ஆர் 59 இல் தேவங்கனாவைக் கைது செய்தது மற்றும் யுஏபிஏ அவர் மீது சுமத்தப்பட்டது.
இந்த வழியில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆரம்பத்தில் வெவ்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் இப்போது அவர்கள் அனைவரும் எஃப்.ஐ.ஆர் 59-இன் ஒரு பகுதியாக உள்ளனர் மற்றும் யுஏபிஏ பிரிவுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

90 நாட்களில் ஏன் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய முடியவில்லை?
ஜூன் 15 அன்று, டெல்லி காவல்துறை சிறப்புப்பிரிவின் அமர்வு நீதிபதி தர்மேந்திர ராணா, ஆகஸ்ட் 14, 2020 வரை யுஏபிஏ 43 டி (2) இன் கீழ் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியுள்ளார். பொதுவாக, விசாரணை அதிகாரியால் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தானாகவே ஜாமீன் கிடைத்துவிடும். யுஏபிஏ, விசாரணை நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரங்களை அளிப்பதால், விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் இருந்து 180 நாட்கள் வரை கேட்கலாம்.
நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் அறிக்கை மற்றும் யுஏஎச் பற்றிய குறிப்பு
அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தொடர்பாக டெல்லி காவல்துறை சமர்ப்பித்த விண்ணப்பத்தின் முதல் வரி கூறுகிறது - "டெல்லி கலவரத்தின் பின்னணியில் உள்ள பெரிய சதித்திட்டத்தை விசாரிப்பதே தற்போதைய வழக்கு." ஜே.என்.யூ மாணவர் உமர் காலித் பிப்ரவரி 23 முதல் 25 வரை நடந்த டெல்லி கலவரத்தில் சதி செய்தார். இதில் அவருடன் தொடர்புடைய பல குழுக்களும் சம்மந்தப்பட்டுளன. "
இது நன்கு அறியப்பட்ட மற்றும் சிறந்த தயாரிப்புடன் வடிவமைக்கப்பட்ட சதி. உமர் காலித் ஆத்திரமூட்டும் உரையை நிகழ்த்தியதோடு, பிப்ரவரி 24-25 தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்தபோது ,மக்கள் தெருக்களிலும் பொது இடங்களிலும் கூடுமாறு கேட்டுக் கொண்டார். இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற பிரச்சாரத்தை சர்வதேச அளவில் பரப்புவதே இதன் நோக்கமாக இருந்தது.
இந்த நோக்கத்தை நிறைவேற்ற துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள், அமில பாட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன
இங்குள்ள சிறப்பு என்னவென்றால், டெல்லி காவல்துறை உமர் காலித்தை 'சதித்திட்டத்தின் தலைவர்' என்று கூறி வருகிறது, ஆனால் காவல்துறையினர் அவரை இதுவரை கைது செய்யவில்லை
சதித்திட்டத்தின் கீழ், டெல்லியில் 21 இடங்களில் ஷாஹீன் பாக் வரிசையில், சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கப்பட்டதாகவும் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, கலவரம் பற்றிய உடனடி தகவல்களை வழங்கிய பல வாட்ஸ்அப் குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இந்த குழுக்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் சிறப்புப்பிரிவு கூறுகிறது.
டாக்டர் ஜாகிர் நாயக்கின் நுழைவு
டெல்லி கலவரம் சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக் தனது உரைகள் மூலம் வெறுப்புணர்ச்சியை தூண்டி, , பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தற்போது மலேசியாவில் இருக்கிறார். அவரை ஒப்படைக்குமாறு என்ஐஏ மலேசிய அரசிடம் முறையிட்டது, அதை அங்குள்ள அரசாங்கம் நிராகரித்தது.
டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, “இந்த கலவரங்களுக்காக காலித் சைஃபி, பி.எஃப்.ஐ யிலிருந்து நிதி திரட்டினார். அவரது பாஸ்போர்ட்டின் விவரங்களின்படி, அவர் இந்தியாவுக்கு வெளியே பயணம் செய்து , ஆதரவு/நிதி திரட்ட, ஜாகிர் நாயக்கை சந்தித்தார்.

இந்த கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முன்னரே, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மார்ச் 11 ஆம் தேதி, டெல்லி கலவரம் குறித்து மக்களவையில் பதிலளித்தபோது, யுனைட்டட் அகெயின்ஸ்ட் ஹேட் அமைப்பின் உமர் காலித் பெயரை குறிப்பிடாமல். அவர் பிப்ரவரி 17 அன்று நிகழ்த்திய உரை பற்றி குறிப்பிட்டார். டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வந்த போது, இந்திய அரசு தனது மக்களுடன் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை உலகுக்கு தெரிவிப்போம். நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக நீங்கள் அனைவரும் வெளியே வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தனது உரையில் கூறினார். இதன் பின்னர், பிப்ரவரி 23-24 அன்று டெல்லியில் ஒரு கலவரம் ஏற்பட்டது."
டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவும் பிப்ரவரி 17-ஆம் தேதி மகாராஷ்டிராவின் அமராவதியில் உமர் காலித்தின் உரையை ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளது.
உண்மையில், பிப்ரவரி 17 அன்று மகாராஷ்டிராவின் யவத்மாலில் உமர் காலித் ஒரு உரையில், "அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தியாவில் இருக்கும்போது, நாங்கள் வீதிகளில் இறங்க வேண்டும். 24 ஆம் தேதி, டிரம்ப் வரும்போது, நாட்டை பிளவுபடுத்த இந்திய அரசு முயற்சிக்கும் என்று நாங்கள் கூறுவோம். மகாத்மா காந்தியின் கொள்கைகள் பறக்கின்றன. இந்திய மக்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடுகிறார்கள் என்று அது சொல்லும். அன்று நாங்கள் தெருக்களில் வெளியே வருவோம். "
உண்மையில், பிப்ரவரி 17 அன்று மகாராஷ்டிராவின் யவத்மாலில் உமர் காலித் ஒரு உரையில், "அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தியாவில் இருக்கும்போது, நாங்கள் வீதிகளில் இறங்க வேண்டும். 24 ஆம் தேதி, டிரம்ப் வரும்போது, நாட்டை பிளவுபடுத்த இந்திய அரசு முயற்சிக்கும் என்று நாங்கள் கூறுவோம். மகாத்மா காந்தியின் கொள்கைகள் பறக்கின்றன. இந்திய மக்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடுகிறார்கள் என்று அது சொல்லும். அன்று நாங்கள் தெருக்களில் வெளியே வருவோம். "
இந்திய அரசியலமைப்பின் 19-ஆவது பிரிவின் கீழ், ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச சுதந்திரம் உள்ளது. மேனகா காந்திக்கும். யூனியன் ஆஃப் இந்தியாவுக்கும் இடையேயான வழக்கில், உச்சநீதிமன்றம் 'பேச்சு சுதந்திரம்' என்ன என்பதை வரையறுத்தது, எந்தவொரு நபரும் எந்த புவியியல் எல்லைகளும் இல்லாமல் தகவல்களை சேகரிக்க முடியும் என்றும் தனது கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.
அரசியலமைப்பின் படி, மக்களை எதிர்ப்பு தெரிவிக்கக் கேட்பது குற்றம் அல்ல. ஆனால் வன்முறையைத் தூண்டுவது குற்றம் என்ற பிரிவின் கீழ் வருகிறது.
இருப்பினும், இந்த வழக்கில் சிறப்புப்பிரிவு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்போது, சான்றுகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் படம் தெளிவாக இருக்கும்.
டெல்லி காவல்துறையின் குற்றப்பத்திரிகை மற்றும் காலஅட்டவணை
இந்திய உளவுத்துறை (ஐ.பி) அதிகாரி அங்கித் சர்மா கொலை வழக்கில் டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் 65-இல் ஒரு குற்றப்பத்திரிக்கையை அளித்துள்ளது. இது இறுதி அறிக்கை என்றும் சொல்கிறது.. குற்றப்பத்திரிகை என்பது விசாரணை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது, விசாரணையில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் வெளிவந்தவை என்ன என்பது பற்றிய விரிவான தகவல்கள் இருக்கும்.
இந்த குற்றப்பத்திரிகையின் ஆரம்ப 5 பக்கங்கள் கொலை விசாரணை பற்றிய தகவல்களைத் தரவில்லை, ஆனால் டிசம்பர் முதல் நடந்து வரும் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தரின் உரைகள் மற்றும் சந்திரசேகர் ஆசாத்தின் உரைகள் டெல்லி கலவரத்தின் அடித்தளம் என்று கூறுகிறது.
ஜாமியா பல்கலைக்கழக சாலையில் சிஏஏ-என்ஆர்சி க்கு எதிரான டிசம்பர் 13 ஆர்ப்பாட்டத்தின் அடித்தளமாக டெல்லி கலவரம் அமைந்ததாக டெல்லி போலீசார் கூறுகின்றனர். அனுமதியின்றி ஜாமியா மெட்ரோ நிலையம் அருகே கூடியிருந்த 2,000 பேர் நாடாளுமன்றம், குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி செல்லத் தொடங்கினர். அமைதிகாக்க, ஜாமியாவின் பல வாயிலிலிருந்து போலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை பின்னோக்கி விரட்டினர், எதிர்ப்பாளர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசத் தொடங்கினர் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தினர்."
டிசம்பர் 15-ஆம் தேதி, டெல்லி காவல்துறை மற்றும் ஜாமியா மாணவர்களுக்கு இடையிலான மோதலையும் ஆடவணையின் பகுதியாக காவல்துறை விவரித்துள்ளது. இருப்பினும், போலீஸ் அறிக்கையில், இந்த சம்பவம் பிப்ரவரி 16 தேதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, "மாலை 5.30 மணி மற்றும் மாலை 6 மணியளவில் ஜாமியாவின் சில மாணவர்கள் மற்றும் சில பழைய மாணவர்கள், உள்ளூர் மக்கள் , ஜாமியா மற்றும் நியூ பிரண்ட்ஸ் காலனியில் பல வழித்தடங்களில் ஆர்ப்பாட்டங்களின் போது பேருந்துகளுக்கு தீ வைத்தனர். காவல்துறையினர் போராட்டக்காரர்களைத் துரத்தியபோது, அவர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜாமியா வளாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்து காவல்துறையினர் மீது கல்லெறிந்து, குழாய் விளக்குகளால் தாக்கி, ஆத்திரமூட்டும் கோஷங்களை எழுப்பினர். நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் ஜாமியா வளாகத்திற்குள் நுழைய வேண்டியிருந்தது, டெல்லி போலீஸ் சட்டத்தின் கீழ் 52 பேர் சிலமணிநேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

இதில், டிசம்பர் 15 ம் தேதி ஜாமியாவின் ஜாகிர் உசேன் நூலகத்தில் மாணவர்கள் மீது அவர்கள் நடத்திய தாக்குதல் பற்றி, காவல்துறை குறிப்பிடவில்லை. பிப்ரவரி 15 ஆம் தேதி, இந்த பொலிஸ் மிருகத்தனத்தின் விடியோவும் வெளியிடப்பட்டது, அதில் போலீஸ் நூலகத்தில் படிக்கும் மாணவர்களை அடிப்பதைக் காணலாம்
இந்த அறிக்கையில், முன்னாள் ஐஏஎஸ் மற்றும் பிரபல சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தரின் ஒரு அறிக்கையும், ஆத்திரத்தை தூண்டும் பேச்சு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தங்களின் அறிக்கையில், "ஹர்ஷ் மந்தர் டிசம்பர் 16 அன்று ஜாமியாவின் கேட் எண் 7 ஐ அடைந்தார். அங்கு அவர் உச்சநீதிமன்றத்தை நம்ப வேண்டாம் என்று போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தினார், மேலும் அவர்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டியிருக்கும் என்று கூறினார்" என கூறப்பட்டிருந்தனர்.
மக்களைத் தூண்டிவிடுவதற்காக ஹர்ஷ் மந்தர் செயல்பட்டார் என்பதற்கு ஆதாரமாக, டிசம்பர் 16, 2019 அன்று அவரது உரையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர் ஆனால் முழு உரையின் சூழலும் முற்றிலும் வேறுபட்டது, இது காந்தியின் கொள்கைகள், பரஸ்பர அன்பு மற்றும் அமைதி பற்றி பேசுகிறது.
இந்த முழு பேச்சும் என்ன என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். டெல்லி காவல்துறையின் தடியடி முடிந்த மறுநாள், ஹர்ஷ் மந்தர் மாணவர்களுடன் பேச ஜாமியாவின் கேட் எண் 7 க்கு வந்தார்.
இங்கே அவர் ஒரு உரையை வழங்கினார், "முதலில் சண்டை, எதற்காக என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். இந்தப் போராட்டம் நம் நாட்டிற்காகவும், பின்னர் நமது அரசியலமைப்பிற்காகவும் உள்ளது. ” என்று அவர் பேசினார். அவர் தனது உரையில் அரசை விமர்சித்தார், சிஏஏ வை தவறு என்றார். இந்த உரையில் நீதிமன்றங்களின் அணுகுமுறை குறித்தும் கருத்து தெரிவித்தார்.
அவர் இந்த உரையை இவ்வாறு முடித்தார் - நான் ஒரு முழக்கத்தை தருவேன்
அரசியலமைப்பு ஜிந்தாபாத், மொஹாத் ஜிந்தாபாத்.
இந்த ஏழரை நிமிட உரை யூடியூபில் கிடைக்கிறது, அதை நீங்கள் இங்கே கேட்கலாம்
டெல்லி கலவர காலவரிசையின் ஒரு பகுதியாகவே ஷாஹீன் பாக் பெண்கள், சிஏஏ - என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக நடத்திய 101 நாட்கள் ஆர்ப்பாட்டத்தை டெல்லி காவல்துறை கருதுகிறது.
இதன் பின்னர், பிப்ரவரி 22 அன்று ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகே கூடியிருந்த ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மீது காவல்துறையின் காலவரிசை வருகிறது. “66 ஃபுட்டா சாலையில், சந்திர சேகர் ஆஸாத்தின் பாரத் பந்த் அழைப்பின் பேரில் கூட்டம் கூடியது. அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. தெருக்களில் கூட்டம் காரணமாக மக்களின் நடமாட்டம் தடைபட்டது.
ஆனால் இதன் பின்னர், பிப்ரவரி 23 மாலை ஜாபராபாத்- மோஜ்பூர் எல்லையில் நடந்த வன்முறைகளுக்கு போலிஸ் அறிக்கை நேரடியாக செல்கிறது.
அதே நாளில், பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் அறிக்கை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, அதில் அவர் காவல்துறையினர் முன்னிலையில் சிஏஏ க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு, மூன்று நாள் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

கபில் மிஸ்ரா, மோஜ்பூரில் சிஏஏ க்கு ஆதரவாக பேரணியை அடைந்தார். அவர் ஒரு டி.சி.பி முன்னிலையில் கூறினார்
டி.சி.பி ஐயா நமக்கு முன்னால் நிற்கிறார். நான் உங்கள் சார்பாக (பக்கத்திலிருந்து) சொல்கிறேன், டிரம்ப் போய்விடும் வரை நாங்கள் அமைதியாக இருப்போம்.ஆனால் சாலை காலிசெய்யப்படாவிட்டால்,அதன் பிறகு நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டோம். நீங்கள் (காவல்துறை) ஜாஃப்ராபாத், சந்த் பாக் ஆகிய இடங்களில் இருந்து சென்றுவிடவேண்டும். இல்லையென்றால் நாங்கள் அதற்குப் பிறகு சாலையில் வர வேண்டியிருக்கும்.
அதே நாளில், CAA க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றும் ஆதரிக்கும் மக்களிடையே மாலையில் வன்முறை தொடங்கியது. ஆனால் டிசம்பர் 13 முதல் தொடங்கிய "காலவரிசையில்" பிப்ரவரி 23 அன்று கபில் மிஸ்ராவின் அறிக்கையை காவல்துறை முற்றிலும் புறக்கணித்தது.
ஒரு மனுவுக்கு பதிலளித்த டெல்லி காவல்துறை உயர்நீதிமன்றத்தில், "இந்த உரை டெல்லியில் கலவரத்தை ஏற்படுத்தியது என்பதைக் குறிக்கும் விசாரணையின்போது எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை" என்று கூறினார்.



டெல்லி காவல்துறை அறிக்கை இவ்வாறு கூறுகிறது, "பிப்ரவரி 23 அன்று பிற்பகல் 3 மணிக்கு, ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையத்திற்கு, ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதை நாங்கள் அறிந்தோம், இரு தரப்பில் இருந்தும் கல்வீச்சு நடத்தப்பட்டது." .

ஆனால் கபில் மிஸ்ராவின் உரை போலீஸ் பதிவுகளில் பதிவு செய்யப்படவில்லை.
டிரம்பின் இந்தியா வருகை மற்றும் தில்லி காவல்துறையின் வாதம்'
கலவரத்தின் பின்னால் ஆழ்ந்த சூழ்ச்சி இருந்ததாக இறுதி போலீஸ் அறிக்கை கூறுகிறது. காவல்துறையினரின் கூற்றுப்படி, "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் இந்தியா பயணத்தில் இருந்தபோது இந்த கலவரங்கள் நடத்தப்பட்டன. இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல, ஆனால் சர்வதேச அளவில் நாட்டின் பிம்பத்தை கெடுக்கும் ஒரு திட்டமிட்ட சதி. ட்ரம்பின் வருகையின் போது முழு அரசு இயந்திரங்களும் தயாரிப்புகளில் மும்முரமாக இருக்கும் என்பதை முஸ்லிம் சமூகத்தின் ஒரு குழு அறிந்திருந்தது, எனவே கலவரத்தின் நேரத்தைப் பார்த்தால், அதன் பின்னால் ஒரு பெரிய சதித்திட்டம் இருப்பது தெளிவாகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
போலிசார் கூறுகையில், " யுனைட்டட் அகெயின்ஸ்ட் ஹேட் அமைப்பை சேர்ந்த காலித் சைஃபியுடன் தாஹிர் உசேன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அதன் நிறுவன உறுப்பினராக உமர் காலித் இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது." ஜனவரி 8 ஆம் தேதி, காலித் சைஃபி ,தாஹிர் உசேன் மற்றும் உமர் காலித் ஆகியோரை ஷாஹீன் பாக் என்ற இடத்தில் சந்தித்தார். இந்த கூட்டத்தில், சிஏஏ- என்ஆர்சி மீதான பெரும் அதிர்வுகளை ஏற்படுத்த ஏற்படுகள் செய்யப்பட்டன, இதனால் மத்திய அரசு அதிர்ச்சியடையக்கூடும், மேலும் நாட்டின் உருவம் உலகளவில் சேதமடையக்கூடும்.
நிதியைப் பற்றி கவலைப்பட வேண்டாம், பாப்புலர் ஃபண்ட் ஆஃப் இண்டியா, இதற்கான நிதி மற்றும் வேறு உதவிகளை செய்யும் என்று உமர் காலித் , தாஹிர் உசேனுக்கு உறுதியளித்தார். டொனால்ட் ட்ரம்பின் இந்தியா பயணத்திற்கு முன்போ அல்லது அல்லது பயண நேரத்திலோ, கலவரம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இரண்டு விஷயங்கள் மிக முக்கியம்
1. டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் தனது முதல் இந்திய பயணத்தை மேற்கொள்ள உள்ளார், முதல் அறிக்கையை “தி இந்து” பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர், ஜனவரி 14 அன்று வெளியிட்டார்.டிரம்ப்பின் வருகை குறித்து அதற்குமுன், ஊடகங்களில் எந்த செய்தியும் இல்லை. டெல்லி காவல்துறையின்படி, "உமர் காலித்-தாஹிர் உசேன்-காலித் சைஃபி ஜனவரி 8 ஆம் தேதி டிரம்ப்பின் இந்திய பயணத்தின்போது, கலவரங்கள் தூண்டப்பட்டு ஒரு பெரிய குண்டுவெடிப்பு நிகழ்த்த முடிவு செய்திருந்தனர்". டிரம்ப்பின் வருகை குறித்த செய்தி ஜனவரி 14 அன்று அதாவது 6 நாட்களுக்குப் பிறகுதான் வந்தபோது, இந்த சுற்றுப்பயணத்தைப் பற்றி அவர்கள் ஏற்கனவே அறிந்திருப்பது எப்படி சாத்தியமாகும். பிப்ரவரி 11 அன்று, இந்திய அரசும் அமெரிக்க அதிபர் மாளிகையும் இந்த வருகை குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டன.
2. டெல்லி காவல்துறையினரின் கூற்றுப்படி, டிசம்பர் மாத இறுதியில், உத்தர பிரதேசத்தில் ஆளும் யோகி அரசாங்கம், பி.எஃப்.ஐ அமைப்பை தடை செய்யக் கோரியது, அதன் பெயரில் கலவரங்களுக்கு நிதி ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் அரசியல் பிரிவு, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ), "சிஏஏ மற்றும் என்ஆர்சி க்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் மக்களை தவறாக வழிநடத்தியது மற்றும் வன்முறைக்கு தூண்டியது" என்று யோகி அரசு குற்றம் சாட்டியது. முன்னதாக, கர்நாடக பாஜக தலவர் ஜகதீஷ் ஷெட்டர், 2015 ஆம் ஆண்டில், பி.எஃப்.ஐ.க்கு தடை விதிக்கக் கோரினார்.
கேரள அமைப்பான பி.எஃப்.ஐ, 2006-இல் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் தான் சமூகப் பணிகளைச் செய்வதாக விவரிக்கிறது, குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் பணியாற்றுவதாகக் கூறுகிறது. கேரளாவில் பல அரசியல் கொலைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் பி.எஃப்.ஐ க்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை தடை செய்வதற்கான குரல்கள் பல முறை பாஜக அரசால் எழுப்பப்பட்டுள்ளன, ஆனால் மிகவும் வலுவான தொடர்பு மற்றும் ஆதாரங்கள் இல்லாததால், பிஎஃப்ஐ இதுவரை தடை செய்யப்படவில்லை.
இறுதி அறிக்கையில் காவல்துறை, இந்த அறிக்கையில் கூறப்பட்ட கூற்றுக்களை உறுதிப்படுத்தக்கூடிய எந்தவொரு உறுதியான ஆதாரத்தையும் குறிப்பிடவில்லை.
எஃப்.ஐ.ஆர் 60- ஷாஹீன் பாக் பகுதியில் உணவு வழங்கிய பிந்த்ரா, ' சதிதிட்டம் தீட்டியவர்'
தலைமை காவலர் ரத்தன்லால் கொலை செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் எண். 60 என்ற வழக்கில் 17 பேரை டெல்லி போலீசார் கைது செய்துதனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில், ஷாஹீன் பாக், சந்த் பாக், சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உணவு வழங்கிய டி.எஸ். பிந்த்ராவை, கலவரத்தின் முக்கிய திட்டம் தீட்டியவர் என்று போலீசார் பெயரிட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல், சமூக ஆர்வலரும், ஸ்வராஜ் இந்தியத் தலைவருமான யோகேந்திர யாதவ், டெல்லி பல்கலைக்கழக மாணவர் தலைவர் காவல்பிரீத் கவுர், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சஃபுரா ஜ்ர்கர், பிஞ்சா தோட் உறுப்பினர் தேவங்கனா கலிதா மற்றும் நதாஷா நர்வால், ஜாமியா மாணவர் மீரான் ஹைதர் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
இப்போது அவர்மீது குற்றம் சாட்டப்படவில்லை, ஆனால் அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.. இந்த வழக்கில் மேலதிக விசாரணையின் பின்னர், காவல்துறை விரைவில் ஒரு துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்.
உண்மையில், பிப்ரவரி 24 அன்று, 42 வயதான ரத்தன்லால் , சந்த் பாக் பகுதியில் பணியில் இருந்தார். கலகக்காரர்கள் அவரைத் தாக்கினர். அவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார், அங்கு அவர் இறந்தார். இந்த வன்முறையில் ஷாஹ்தாரா டி.சி.பி அமித் குமார் சர்மா, கோகுல்பூரி ஏ.சி.பி அனுஜ் குமார் ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். டெல்லி கலவரத்தில் இறந்தவர்களில்,கான்ஸ்டபிள் ரத்தன்லால் முதலாமவர் ஆவார்.
குற்றப்பத்திரிகை 60- சாட்சிகளின் ஒரேபோன்ற வாக்குமூலம்
இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம் (சிஆர்பிசி) 164 பிரிவின்கீழ், மூன்று சாட்சிகள் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் - நஜாம் அல் ஹசன், தோகிர், குட்டு என்ற சல்மான். இவர்களின் வாக்குமூலங்களை படிக்கும்போது, அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான விஷயங்களைச் சொல்லியிருப்பது தெரிகிறது. உதாரணமாக-
நஜாம்: என்.ஆர்.சி, சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நீங்கள் செய்ய வேண்டும் என்று டி.எச். பிந்த்ரா தொடங்கிய பேச்சில், நான் ஒரு நங்கூரம், ஒரு மருத்துவ முகாம் அமைப்பேன், முழு சீக்கிய சமூகமும் உங்களுடன் உள்ளது. நீங்கள் இப்போதும் எழுந்திருக்கவில்லை என்றால், 1984-ஆம் ஆண்டில் எங்களுக்கு ஏற்பட்ட அதே நிலைதான் உங்களுக்கும் ஏற்படும் என்றார்.
அங்கு உரையாற்றிய மாணவர்கள், ஜாமியா, ஜே.என்.யூ மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஆர்பட்டம் நடத்துவது பற்றி பேசினார்கள்
சல்மான் என்ற குட்டு: சி.ஏ.ஏ-என்.ஆர்.சி முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானது என்று டி.எஸ். பிந்த்ரா கூறியிருந்தார். 1984-இல் சீக்கியர்களுக்கு என்ன நடந்ததோ, அதுபோலவே செய்வார்கள் என்றார்.
ஜாமியா-ஜே.என்.யுவில் இருந்து மாணவ மாணவியர் வந்து மேடையில் உரை நிகழ்த்தினர், இந்த ஆர்பாட்டம் இப்படியேதொடர்ந்தது.
மூன்று வெவ்வேறு நபர்களின் வாக்குமூலங்கஈ ஏறக்குறைய ஒரேமாதிரி உள்ளன. .
இந்த அறிக்கைகளை பகுப்பாய்வு செய்து, டெல்லி காவல்துறை கூறுகிறது, "சலீம் கான், சலீம் முன்னா, டி.எஸ். பிந்த்ரா, சல்மான் சித்திகி, டாக்டர் ரிஸ்வான், அதர், சதாப், ரவிஷ், உபாசனா தப்சூம் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தனர் ,கலவரங்களுக்கு மக்களைத் தூண்டினர்.
ஆனால் டெல்லி காவல்துறை இதுபோன்ற ' வெறுப்பைத்தூண்டும் உரைகள்' பற்றிய எந்த மின்னணு ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, கான்ஸ்டபிள் ரத்தன்லாலைக் கொன்றது யார்?
சிசிடிவி வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசாரால் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கட்டைகள், தண்டுகள் மற்றும் கற்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் இங்குள்ள சிறப்பு என்னவென்றால், தலைமை கான்ஸ்டபிள் ரத்தன்லாலின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் 21 காயங்கள் இருந்தன. அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக அவர் இறந்தார் மற்றும் அவரது நுரையீரலில் ஒரு 'துப்பாக்கியால் சுடப்பட்ட காயமும் இருந்தது.
ஆனால் காவல்துறையினரின் சி.சி.டி.வி காட்சிகளின் விவரங்களின்படி, அவர்கள் யாரும் கையில் துப்பாக்கி-ரிவால்வர்கள் போன்றவற்றை வைத்திருக்கவில்லை மேலும், இந்த 17 பேரில் கான்ஸ்டபிள் ரத்தன்லாலை கொன்றது யார் என்று முழு குற்றப்பத்திரிகையிலும் காவல்துறை தெளிவாகக் குறிப்பிடவில்லை?

அங்கித் ஷர்மாவின் கொலை, தாஹிர் உசேன் மற்றும் போலீசாரின் 'சான்றுகள்'
தஹிர் உசேன் மீது டெல்லி கலவரம் தொடர்பாக மொத்தம் 11 வழக்குகள் உள்ளன. எஃப்.ஐ.ஆர் 65 - அங்கித் சர்மா கொலை, எஃப்.ஐ.ஆர் 101 - சந்த் பாக் வன்முறையில் முக்கிய பங்கு, எஃப்.ஐ.ஆர் 59 - டெல்லி கலவரங்களுக்குப் பின்னால் ஆழ்ந்த சூழ்ச்சி. இந்த மூன்று மிக முக்கியமானவை. எஃப்.ஐ.ஆர் 101 மற்றும் 65, இரண்டும் மிகவும் ஒத்ததாக உள்ளன.

அங்கித் ஷர்மாவின் தந்தை ரவீந்தர் குமாரின் எஃப்.ஐ.ஆர் படி, பிப்ரவரி 25 அன்று மாலை 5 மணியளவில், அங்கித் வீட்டிற்கான பொருட்களை வாங்க வெளியே சென்றார், ஆனால் அவர் நீண்ட நேரம் வராதபோது, அவரது வீட்டார் அவரைத் தேடத் தொடங்கினர். அவர் அருகில் வசிக்கும் கலுவுடன் வெளியே சென்றிருப்பது தெரியவந்தது. அங்கித்தின் குடும்பத்தினர் கலுவிடம் கேட்டபோது, சந்த் பாக் மசூதியில் இருந்து ஒரு சிறுவனைக் கொன்ற பிறகு, உடல் வடிகாலில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரவீந்தர் குமார் தயால்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தபோது, முக்குளிப்போர் உதவியுடன் அங்கித்தின் உடல் வெளியே எடுக்கப்பட்டது, உள்ளாடை கொண்டுமட்டுமே அவரை அடையாளம் காண முடிந்தது.
பத்தி 38 இல், சில நேரில் கண்ட சாட்சிகளை விசாரித்ததன் அடிப்படையில், "பிப்ரவரி 25 அன்று, இந்துக்களின் ஒரு கும்பல் தாஹிர் உசேனின் வீடு E-7, கஜூரி காஸிலிருந்து சிறிது தொலைவில் நின்றது. வீட்டின் அருகே 20-25 கலவரக்காரர்கள் இருந்தனர், அவர்கள் கைகளில் கம்பங்கள், கத்திகள் மற்றும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர். இரு தரப்பிலிருந்தும் மக்களை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அங்கித் கூட்டத்திலிருந்து வெளியே வந்தார், ஆனால் தாஹிர் உசேனின் ஆத்திரமூட்டலில், கூட்டம் அங்கித்தை பிடித்து, சந்த் பாக் புலியாவுக்கு முன்னால், 'பன்னி பேக்கர் கேக்' கடை இ -17, நாலா சாலை, கஜூரி காஸுக்கு கொண்டுசென்றது. கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார் மற்றும் சடலம் வடிகாலில் வீசப்பட்டது." என்று போலீஸ் தெரிவித்தது.
ஏழு சாட்சிகளின் அடிப்படையில், இந்த சம்பவம் குறித்த விவரங்களை காவல்துறை முன்வைத்துள்ளது. அங்கித் வீட்டின் அருகே வசிக்கும் காலு என்ற நபரின் வாக்குமூலமும் உள்ளது, மேலும் சம்பவத்தின் போது அங்கித் உடன் அவர் இருந்தார்.
இருப்பினும், கொலை செய்த பின்னர் சந்த் பாக் மசூதியில் இருந்து யாரோ தூக்கி எறியப்பட்டதாக கும்பல் தன்னிடம் தெரிவித்ததாக, அங்கித்தின் தந்தை ரவீந்தர் குமார், போலீசில் புகார் அளித்திருந்தார். ஆனால் மசூதியில் அங்கித் கொல்லப்பட்டார் என்ற அவரின் கூற்று விசாரிக்கப்பட்டதா என்று போலீஸ் விசாரணையில் கூறப்படவில்லை. ஆம் என்றால், காவல்துறைக்கு அங்கு என்னகிடைத்தது? வழக்கமாக காவல்துறை முதலில் புகார்தாரரின் கூற்றுக்களை விசாரிக்கும்.
இந்த பகுதியின் சி.சி.டி.வி.கள் வேலை செய்யவில்லை அல்லது வன்முறையின் போது அவை உடைக்கப்பட்டன என்றும் காவல்துறை தனது விசாரணையில் கூறியுள்ளது.
மார்ச் 12 ஆம் தேதி நடந்த இந்த வழக்கில், சிறப்புப் பிரிவு , ஹசின் என்ற 20 வயது இளைஞரை கைது செய்தது. போலிஸ் அதன் விசாரணையில், தொலைபேசி உரையாடலின் போது, ஒருவரை கொன்ற பின்னர் வடிகாலில் வீசியதாக அவர் ஒப்புக்கொண்டதை, போலீஸ் தனது விசாரணையில் கண்டறிந்தது. அறிக்கையின் 48-ஆவது பத்தியின்படி, அவர்தான் தனியாக கொலை செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் இந்த வழக்கில், கோச்சர் என்ற நேரில் கண்ட சாட்சி காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில், அங்கித் சர்மா கொலை செய்யப்பட்ட நேரத்தில், அந்தப் பகுதி கவுன்சிலர் தாஹிர் உசேன் அங்கு இருந்ததாகவும், மக்களை கொலைக்கு தூண்டியதாகவும், இதன் விளைவாக ஸ்வரூப் ஹசீனுடன் சேர்ந்து, அன்ஸ், ஜாவேத் . ஷோயிப் ஆலம், குல்ஃபாம் மற்றும் ஃபிரோஸ் ஆகியோர், அங்கித் ஷர்மாவைக் கொன்றனர் என்று கூறியுள்ளார்.
தாஹிர் உசேனுக்கு, கலவரம் மற்றும் அங்கித் சர்மா கொல்லப்பட்டதில் உள்ள தொடர்பு குறித்து காவல்துறை முக்கியமாக இரண்டு விஷயங்களைச் சொல்கிறது.
1) கல்-செங்கல் துண்டுகள், உடைந்த பாட்டில்கள், பாட்டில்களில் அமிலம் மற்றும் பெட்ரோல் குண்டுகள் தாஹிர் உசேன் வீட்டில் இ-7, கஜூரி காஸ், பிரதான கரவால் நகரில், தடயவியல் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது. கலகக்காரர்கள் தாஹிர் உசேன் வீட்டின் கூரையில் இருந்து ஆசிட் பாட்டில்கள், பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்களை வீசினர். இந்த வீட்டின் முதல் தளத்தில் அவருக்கு ஒரு அலுவலகம் இருந்தது. இந்த வீட்டின் கூரை ஒரு ஏவுதளமாக பயன்படுத்தப்பட்டது, மேலும் தாஹிர் உசேன் வீட்டிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

2) தாஹிர் உசேன் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை ஜனவரி 7 ஆம் தேதி கஜூரி காஸ் காவல் நிலையத்தில் டெபாசிட் செய்திருந்தார், பிப்ரவரி 22 அன்று அதாவது வன்முறை தொடங்குவதற்கு முந்தைய நாள், அவர் கஜூரி காஸ் காவல் நிலையத்திலிருந்து தனது துப்பாக்கியை பெற்றுக்கொண்டார்.. அவர் ஏன் துப்பாக்கியை வெளியே எடுத்தார் என்பதற்கு தாஹிர், திருப்திகரமான பதில் அளிக்கவில்லை.இந்த கைத்துப்பாக்கியின் 100 தோட்டாக்களில், 22 பயன்படுத்தப்பட்டன, 14 எங்கே என்று தெரியவில்லை.
இதே விசாரணையில், 54 வது பத்தியில், தாஹிர் உசேனின் அழைப்பு தரவுகளின் அடிப்படையில் காவல்துறை இவ்வாறு தெரிவிக்கிறது. ”{அவர்,பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 25 வரை டெல்லி காவல்துறையின் பி.சி.ஆர் வேனை பல முறை அழைத்ததாக கூறுகிறார். பிப்ரவரி 24 அன்று பி.சி.ஆர் பிற்பகல் 2.50 மணி முதல் மாலை 6 மணி வரை 6 முறை அழைக்கப்பட்டது, பிப்ரவரி 25 அன்று பி.சி.ஆர் தாஹிர் உசேன் எண்ணிலிருந்து 3.50 முதல் 4.35 வரை 6 முறை அழைக்கப்பட்டது.”
பிப்ரவரி 24 அன்று செய்த ஆறு அழைப்புகளில், நான்கு அழைப்புகள் மட்டுமே பி.சி.ஆருக்கு கிடைத்தன. அதில் மூன்று அழைப்புகள் தயால்பூர் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டன.
சம்பவம் நடந்த இடத்தில் பெரும் கூட்டம் இருந்ததாகவும், காவல்துறையினர் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால், தாஹிர் உசேனின் அவசர அழைப்பை தொடர்ந்து உடனே அங்கு செல்லமுடியவில்லை என்றும் அவசரகால அதிகாரி கூறுகிறார். காவல்துறையினர் இரவில் தாமதமாக தாஹிர் உசேன் வீட்டை அடைந்தபோது, அருகிலுள்ள கடைகளில் தீ பிடித்து இருப்பதையும், தாஹிர் உசேனின் வீடு சேதம் இல்லாமல் இருப்பதையும் அவர் கண்டார். தாஹிர் உசேன் அவரது வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தார். போலிசார் மேலும் கூறுகையில், "இதைப் பார்த்தால், தாஹிர் உசேன் கலகக்காரர்களுடன் இருந்ததாகத் தெரிகிறது, அவர் சட்டத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென்றே பி.சி.ஆரை அழைத்தார்".
கூட்டம் காரணமாக, ஒரு அவசர அழைப்பு வந்த பிறகும் காவல்துறையினர் அந்த இடத்தை அடைய முடியாமல் போனது ரு விசித்திரமான காரணம் என்று தெரிகிறது. மேலும், பிசிஆர் அழைப்பு ஒரு உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பது காவல்துறையின் கருத்தாகத் தெரிகிறது, ஏனெனில் அதை நிரூபிக்க, காவல்துறை எந்தவொரு வலுவான ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
இரண்டாவதாக, கலவரத்திற்கு ஒரு நாள் முன்பு கைத்துப்பாக்கியை பெறுதல். உண்மையில் தேர்தலின் போது, விதிகள் படி உரிமம் பெற்ற துப்பாக்கிகள் டெபாசிட் செய்யப்படுகின்றன, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காவல் நிலையத்திலிருந்து அதை திரும்ப பெறுவது,பொதுவான செயல்.டெல்லியில் சட்டமன்றத் தேர்தல்கள் பிப்ரவரி 8 முதல் 11 வரை நடைபெற்றது.
உடலில் 51 காயங்கள் இருந்தன, அவை கத்தி, கம்பம் அல்லது கூர்மையான ஆயுதத்தால் ஏற்பட்டது என்று அங்கித் ஷர்மாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கித்தின் உடலில் குண்டு காயங்கள் எதுவும் காணப்படவில்லை.
எஃப்.ஐ.ஆர் 65 என்பது அங்கித் ஷர்மாவின் கொலை பற்றியது மற்றும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை அவர் மீது தோட்டாக்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
இந்த கூற்றில் புதிதாக எதுவும் இல்லை. டெல்லி போலீஸ்,ஜூன் மாதத்தில், எஃப்.ஐ.ஆர் 101 இன் பத்தி 36 ல், கலவரத்தில் தாஹிர் உசேன் தனது பங்கை ஒப்புக்கொண்டார் என்று தெளிவாக எழுதியுள்ளது.
இருப்பினும், இந்த வாக்குமூலம் சிஆர்பிசி 161 இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த வாக்குமூலம் ஒரு மாஜிஸ்திரேட் முன்னிலையில் செய்யப்படவில்லை, எனவே தாஹிர் உசேனின் இந்த வாக்குமூலம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகாது.
ஆகஸ்ட் 2 ம் தேதி, டெல்லி காவல்துறையின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சில ஊடக அறிக்கைகள் வெளிவந்தன, 'தாஹிர் உசேன் அரசாங்க வாக்குமூலத்தில்,தனது சகாக்களில் ஒருவரான காலித் சைஃபி மற்றும் பி.எஃப்.ஐ ம், வன்முறையைச் செய்ய தனக்கு உதவியதாக ஒப்புக் கொண்டார். என்று அவை தெரிவித்தன.
இந்த கூற்றில் புதிதாக எதுவும் இல்லை. டெல்லி போலீஸ்,ஜூன் மாதத்தில், எஃப்.ஐ.ஆர் 101 இன் பத்தி 36 ல், கலவரத்தில் தாஹிர் உசேன் தனது பங்கை ஒப்புக்கொண்டார் என்று தெளிவாக எழுதியுள்ளது.
ஆனால் ஜனவரி 8 ம் தேதி நடந்த கலவரங்களுக்காக உமர் காலித், தாஹிர் உசேன் மற்றும் காலித் சைஃபி இடையேயான சந்திப்பு நடந்த தேதியை போலீசார் மாற்றியுள்ளனர்.
இப்போது காவல்துறையினர் "பிப்ரவரி 4 ஆம் தேதி, சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வர மக்களைத் தூண்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. காலித் சைஃபியின் வேலை மக்களைத் தூண்டிவிட்டு தெருக்களில் அழைத்துச் செல்வதாகும்" என்று கூறுகிறது.
இருப்பினும், இந்த வாக்குமூலம் சிஆர்பிசி 161 இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த வாக்குமூலம் ஒரு மாஜிஸ்திரேட் முன்னிலையில் செய்யப்படவில்லை, எனவே தாஹிர் உசேனின் இந்த வாக்குமூலத்திற்கு சட்டப்பூர்வ செல்லுபடியாக்கம் இல்லை.
பீமா கோரேகாவ்

பீமா கோரேகாவின் வரலாறு

பீமா-கோரேகாவ், 201 ஆண்டுகளுக்கு முன்பு,1818 ஜனவரி 1-ஆம் தேதி பெஷ்வாக்கள் தலைமையிலான மராத்தா சாம்ராஜ்யத்திற்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையிலான போருக்கு பெயர் பெற்றது.,
இந்த போரில், ஷெட்யூல்ட் வகுப்பினரின் மஹார் சமூகம் பேஷ்வாக்களுக்கு எதிராக ஆங்கிலேயரை ஆதரித்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி பெஷ்வாஸை தோற்கடித்தது ,மஹார் ரெஜிமென்ட் காரணமாக மட்டுமே.
மஹார்களின் இந்த வெற்றியின் நினைவாக இங்கு 'வெற்றி தூண்' நிறுவப்பட்டுள்ளது, போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக தலித் சமூகம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி வருகிறார்கள்.
1818 ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்ட மகர் வீரர்களின் பெயர்கள் இந்த பத்தியில் பொறிக்கப்பட்டுள்ளன.
புணேவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த சனிவர்வாடாவில் 'எல்கர் பரிஷத்' கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித், சோனி சோரி, பி.ஜி. கோல்சே பாட்டீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பீமா கோரேகாவ் வன்முறையில் காவல்துறை இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது, ஏனெனில், இரண்டு வெவ்வேறு காலங்களில் கைதுகள் நடந்துள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ், மெமரி கார்டு மற்றும் மொபைல் போன் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையை தயாரித்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
யாருக்கு என்ன பங்கு இருந்தது? போலீஸ் குற்றப்பத்திரிகை என்ன சொல்கிறது?
சுதிர் தவாலே, ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், ஷோமா சென் மற்றும் மகேஷ் ரெளத் ஆகியோரை கைது செய்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை கூறுகிறது.
கபீர் கலா மஞ்சின் செயல் உறுப்பினரான சுதிர் தவாலே, தடைசெய்யப்பட்ட அமைப்பான சிபிஐ மாவோயிஸ்ட்டால் அதன் உறுப்பினர்களான ரோனா வில்சன் மற்றும் சுரேந்திர காட்லிங் மூலம் பல முறை அணுகப்பட்டார். கபீர் கலா மஞ்ச் ஏற்பாட்டில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யுமாறு சிபிஐ மாவோயிஸ்ட், கேட்டது. இந்த திட்டத்தின் நோக்கம், பீமா கோரேகாவ் போரின் 200 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலித் அமைப்புகளை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கோபத்தைத் தூண்டுவதாகும்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, ரோனா வில்சன் மற்றும் சுதிர் தவாலே ஆகியோர் தலைமறைவாக உள்ள ஆர்வலர்கள் மிலிந்த் டெல்துண்டே மற்றும் பிரகாஷ் எனப்படும் ரிதுபர்ணா கோஸ்வாமி ஆகியோர் குற்றவியல் சதித்திட்டத்தை உருவாக்கினர். 1 ஜனவரி 2018 அன்று சதித்திட்டத்தின் கீழ் பீமா கோரேகாவ் வெற்றிதின கொண்டாட்டத்தின் கீழ், சுதிர் தவாலே மற்றும் ஹர்ஷாலி பொட்டார், கபீர் கலா மஞ்ச் உறுப்பினர்களுடன் அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்டனர். டிசம்பர் 31 அன்று எல்கர் பரிஷத்தின் கீழ் அவர்கள் வெற்ப்புணர்ச்சியை தூண்டும் கோஷங்களை எழுப்பினர், பாடல்களைப் பாடினர் மற்றும் தெரு நாடகங்களை நிகழ்த்தினர் என்று போலீசார் கூறுகிறார்கள். இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வன்முறையின் வடிவத்தை எடுத்ததாக காவல்துறை குற்றம் சாட்டுகிறது.
தடைசெய்யப்பட்ட அமைப்பான சிபிஐ மாவோயிஸ்டின் அறிவுறுத்தலின் பேரில் தவாலே, கேட்லிங், வில்சன், ரவுத் மற்றும் சென் ஆகியோர் பீமா கோரேகாவ் வெரற்றிதினம் மற்றும் எல்கர் பரிஷத்தை ஏற்பாடு செய்ததை அவர்கள் அறிந்ததாக போலீசார் கூறுகின்றனர். இந்த சோதனைடிடலின் போது மீட்கப்பட்ட கடிதங்கள், நாட்டில் பாஜக-ஆர்.எஸ்.எஸ்ஸின் பிராமணிய கொள்கைகளால் தலித்துகள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்பின்மை குறித்த இந்த உணர்வை மக்களை ஒழுங்கமைக்க பயன்படுத்த வேண்டும் என்றும் எழுதியுள்ளதாக காவல்துறை கூறுகிறது. . இந்த திட்டத்தை செயல்படுத்த, தடைசெய்யப்பட்ட கட்சி ,சுரேந்திர காட்லிங் மற்றும் ஷோமா சென் மூலம் பணத்தை வழங்கியது. சிபிஐ மாவோயிஸ்ட் குழுவின் மூத்த உறுப்பினர்ஒருவர், ஜூலை 2017 ஆகஸ்டில் தவாலேவுக்கு நிதி வழங்கினார்.
எல்கர் பரிஷத்தை ஏற்பாடு செய்வதன் முக்கிய நோக்கம் சிபிஐ மாவோயிஸ்ட்டின் திட்டத்தை நிறைவு செய்வதுதான் என்று காவல்துறை குற்றம் சாட்டுகிறது, இந்த முடிவு கிழக்கு பிராந்திய பணியகத்தின் (ஈஆர்பி) கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த வேலையில், தப்பியோடிய குற்றம் சாட்டப்பட்ட தோழர் மங்லு மற்றும் தோழர் தீப்பு ஆகியோர் நவம்பர்-டிசம்பர் 20017 க்கு இடையில் தவாலேவுடன் ஒத்துழைத்து, மகாராஷ்டிராவில் பல தலித் அமைப்புகளின் ஆதரவைப் பெற்றனர்.

"மகேஷ் ரெளத் மூலம் தவாலே, கேட்லிங் மற்றும் சென் ஆகியோருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த பணம் தடை செய்யப்பட்ட கட்சி சிபிஐ மாவோயிஸ்ட்டால் ரெளத்துக்கு வழங்கப்பட்டது. டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸின் இரண்டு மாணவர்களை மகேஷ் ரெளத் ஒரு கொரில்லா சண்டையில் பயிற்சிக்காக வனப்பகுதிக்கு அனுப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரிதுபர்ணா கோஸ்வாமி ஷோமா செனுக்கு எழுதிய கடிதத்தால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் கூறுகின்றனர். மகேஷ் ரெளத் சிபிஐ மாவோயிஸ்டின் தீவிர உறுப்பினர் என்றும், புதிய நபர்களைச் சேர்ப்பதே அவரது வேலை என்றும் போலீசார் கூறுகின்றனர். இந்த வேலைக்ளுக்காக பணம் திரட்டியதாகவும் ரெளத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரோனா வில்சன் மற்றும் கேட்லிங் ஆகியோரிடமிருந்து மீட்கப்பட்ட கணினிகள் மூலமாக கிழக்கு பிராந்திய பணியகத்தின் சிபிஐ மாவோயிஸ்ட் கூட்டத்தின் விவரங்களை கண்டுபிடித்ததாக போலீசார் கூறுகின்றனர். இந்த சந்திப்பு 2015 டிசம்பரில் நடந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த கூட்டத்தில் தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஒன்றுபட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ரோனா வில்சன் மற்றும் மிலிந்த் டெல்டும்ப்டே ஆகியோரின் கடிதப் பரிமாற்றத்திலும் இது வந்துள்ளது என்று போலீசார் கூறுகிறார்கள்
தற்போதைய சவால்கள் மற்றும் எங்கள் பணி என்ற தலைப்பில் ஒரு துண்டுப்பிரசுரத்தை காவல்துறை பெற்றுள்ளது. இந்த படிவத்தை சிபிஐ மாவோயிஸ்ட் அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பியது. இது ரோனா வில்சனின் கணினியிலிருந்து பெறப்பட்டது. இந்த துண்டுப்பிரசுரத்தின் 16 ஆம் பக்கத்தில், நடவடிக்கைகள் (பயங்கரவாதம்) தொடரும் என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் கூறுகின்றனர். இந்த நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்காக எல்கர் பரிஷத் ஏற்பாடு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட கட்சி உறுப்பினரும் ஈஆர்பி செயலாளருமான கிஷனாடா எனப்படும் பிரசாந்த் போஸ் ஆகியோருடன் கூட்டாக பிரதமரைக் கொல்ல சதி செய்ததாகவும், நாட்டிற்கு எதிராக போரை நடத்தியதாகவும், ரோனா வில்சன் மீது போலீஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவின் அரசியலமைப்பு ஜனநாயக முறையை முறியடிக்கும் சிபிஐ மாவோயிஸ்ட்டின் பெரிய சதித்திட்டத்தை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மேற்கொள்ள முயன்றதாக காவல்துறை முடிவு செய்கிறது.
துணை குற்றப்பத்திரிகை
வர்வர் ராவ், சுதா பரத்வாஜ், வெர்னான் கோன்சால்விஸ் மற்றும் அருண் ஃபெரீரா ஆகியோரை கைது செய்த பின்னர் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ரோனா வில்சன் மற்றும் தலைமறைவாக குற்றம் சாட்டப்பட்ட கிஷனாடா எனப்படும் பிரசாந்த் போஸ் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்க வரவரராவ் சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.
சிபிஐ மாவோயிஸ்டின் மூத்த தலைவர் வரவர ராவ் என்று காவல்துறை தெரிவித்துள்ளது, தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர்களுடன் ராவ் தொடர்பு கொண்டிருந்ததாக போலீசார் கூறுகின்றனர். இது தவிர, வரவர ராவ் நேபாளத்தின் மாவோயிஸ்ட் தலைவர் வசந்துடன் ஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ராவ் பணம் திரட்டியதாகவும் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் அதை எடுத்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடமாட்டம் குறித்து வரவர ராவ் மற்றும் கேட்லிங் ஆகியோர் தப்பி ஓடிய தலைமறைவு தோழர்களுக்குத் தெரிவித்தனர், இது பல வன்முறைத் தாக்குதல்களுக்கும் உயிர் சேதத்திற்கும் வழிவகுத்தது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, வெர்னான் கோன்சால்விஸ், அருண் ஃபெரீரா மற்றும் சுதா பரத்வாஜ் ஆகியோரும் சிபிஐ மாவோயிஸ்டின் உறுப்பினர்கள். மேலும் இளைஞர்களை அவர்களுடன் இணைத்து தடைசெய்யப்பட்ட அமைப்பின் சித்தாந்தத்தை பரப்புகிறார்கள்.
கோன்சால்விஸ் முன்னதாக ஆயுதச் சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் மீது மும்பையில் உள்ள காலா சவுக்கி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, மேலும் அவருக்கு ஒரு வழக்கில் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. கோன்சால்விஸ் இப்போதும் ஒரு தீவிர மாவோயிஸ்ட் ஆர்வலர் என்று போலீசார் கூறுகின்றனர்.
மக்கள் பொய்யர்கள் சங்கம் (ஐஏபிஎல்), சிபிஐ மாவோயிஸ்டின் அமைப்பு என்று போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். சுதா பரத்வாஜ் மற்றும் காட்லிங் ஆகியோர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர், மேலும் சிபிஐ மாவோயிஸ்ட் அவர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.
வரவர ராவ் புரட்சிகர ஜனநாயக முன்னணியின் (ஆர்.டி.எஃப்) தலைவர். தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் முன்னணி அமைப்பு இது என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ மாவோயிஸ்டுகளின் கருத்துக்களை பரப்புவதற்காக அவர் பல கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் பேரணிகளை ஏற்பாடு செய்தார். ஹைதராபாதில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆர்.டி.எஃப் மாநாட்டில் வர்வர ராவ், ஷோமா சென், மகேஷ் ரவுத் மற்றும் தப்பி ஓடிய ரிதுபர்ணா கோஸ்வாமி ஆகியோர் கலந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, துன்புறுத்தப்பட்ட கைதிகள் ஒற்றுமைக் குழுவும் (பிபிஎஸ்சி) சிபிஐ மாவோயிஸ்டின் ஒரு பகுதியாகும். வர்வர் ராவ் மூலம் சிபிஐ மாவோயிஸ்ட்டால் பிபிஎஸ்சிக்கு நிதியுதவி வழங்கப்பட்டதாகவும், சுதா பரத்வாஜ் பிபிஎஸ்சியின் முக்கிய உறுப்பினராக உள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்
பீமா கோரேகாவ் வன்முறைச் சம்பவத்தில், நாடு முழுவதும் இருந்து மக்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் சிலர் அறிஞர்கள், சிலர் வழக்கறிஞர்கள், சிலர் எழுத்தாளர்-கவிஞர்கள் மற்றும் சிலர் மனித உரிமைகள் அல்லது தலித் உரிமை ஆர்வலர்கள். அவர்கள் அனைவரும் அந்தந்த துறைகளைச் சேர்ந்த நன்கு அறியப்பட்டவர்கள். இவர்களில் சிலர் பொதுமக்கள் சார்பாக அரசுக்கு எதிராக சட்ட மோதலில் ஈடுபடுவதாக அறியப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சுதிர் தாவ்லே

சுதிர் தாவ்லே மகாராஷ்டிராவின் பிரபலமான சமூக ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். மராத்தியில் வித்ரோஹி என்ற பத்திரிகையையும் வெளியிடுகிறார்.. அவர் தலித்துகளின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி வருகிறார். 2011 ஆம் ஆண்டில், அவர் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார், மேலும் ஒரு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பின்னர், நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்தது. அந்த நேரத்தில் அவரது வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் ஆவார், அவர் தற்போது பீமா கோரேகாவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.
சுரேந்திர காட்லிங்

சுரேந்திர காட்லிங் நாக்பூரில் வசிக்கிறார், தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை வழக்குகளை வாதிடுகிறார். இந்திய மக்கள் பொய்யர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். அவர் ஒரு தலித் ஆர்வலர். பல இயங்கங்களில் ஈடுபட்டுள்ளார். ஒரு வழக்கறிஞராக, அவர், யுஏபிஏ மற்றும் முந்தைய பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களான தடா மற்றும் பொட்டா வின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதிட்டுள்ளார். மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததற்காக கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவின் வழக்கறிஞராகவும் ,அவர் இருந்தார். சாய்பாபா கட்சிரோலி நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். ஊனமுற்ற சக்கர நாற்காலியில் இருக்கும் பேராசிரியரான ஜி.என்.சாய்பாபா தற்போது சிறையில் உள்ளார்.
ரோனா வில்சன்

ஜேஎன்யூ மாணவர் வில்சன் டெல்லியில் வசிக்கிறார். அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் மிகவும் சுறுசுறுப்பான தொண்டர்களில் ஒருவர். அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான குழுவில் (சிஆர்பிபி) உறுப்பினராகவும் உள்ளார். ஜி.என் சாய்பாபாவின் மீட்பு மற்றும் விடுதலை இயக்கத்தையும் அவர் நடத்தி வருகிறார். அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியாக செயல்படும் ஆர்வலர்கள் கைது செய்யப்படுவதை அவர் எதிர்த்து வருகிறார்.
ஷோமா சென்

ஷோமா சென் ஒரு ஆங்கில பேராசிரியர், அவர் நாக்பூரின் ஆர்.டி.எம் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையின் தலைவராக உள்ளார். பீமா கோரேகாவ் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் நாக்பூரிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள், பழங்குடியினர் மற்றும் தலித்துகளின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் அவர் எழுதி வருகிறார், மேலும் அவற்றை மதிப்புமிக்க செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். அவர் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவில் உறுப்பினராக உள்ளார். அவர் மனித உரிமைத் துறையில் பணியாற்றும் பல அமைப்புகளுடன் தொடர்புடையவர். அவர், வடகிழக்கு முதல் பஸ்தர் வரை , அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட பெண் அரசியல் கைதிகள் பற்றி குரல்கொடுத்து அவர்களுக்கு சட்ட உதவி வழங்கியுள்ளனர்.
மகேஷ் ரெளத்

பீமா கோரேகாவ் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், குறைவான வயதுடைய நபர் மகேஷ் ரவுத் ஆவார். இவர் மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மும்பை - டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் நிறுவனத்தில் தனது படிப்பை மேற்கொண்டார். கிராம மேம்பாடு குறித்து அறிவுள்ள இவர், பிரதமர் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஃபெல்லோஷிப்பையும் பெற்றுள்ளார். அவர் கட்சிரோலியின் கிராமப்புறங்களில் பல கிராம சபைகளுடன் நெருக்கமாக பணியாற்றி வந்தார். கட்விரோலி என்பது மகாராஷ்டிராவின் பழங்குடி ஆதிக்கம் நிறைந்த பகுதி, இது மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. நீர், காடு, நில உரிமை தொடர்பான பிரச்சாரங்களிலும் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
வரவர ராவ்

ராவ் ஒரு பிரபலமான கவிஞர், எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர். ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் தெலுங்கு கவிஞராக அறியப்படுகிறார். இவரது சுமார் 15 கவிதைத் தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன, அவை பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது எழுத்துக்கள் மற்றும் கவிதைகள் காரணமாக, சிலர் அவரை மாவோயிஸ்டுகளிடம் அனுதாபம் காட்டுபவர் என்று கூட சொல்கிறார்கள். நாடு முழுவதும் பல அமைப்புகள் மற்றும் பிரச்சாரங்களுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ஒரு இடதுசாரி ஆர்வலராக அவர் கருதப்படுகிறார். அவர் இதற்கு முன்பு பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முதன்முதலில் 1973-இல் கைது செய்யப்பட்டார், ஆனால் ஒருபோதும் ஒரு குற்றச்சாட்டில் தண்டிக்கப்படவில்லை. ஆந்திர அரசுக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் , மத்தியஸ்தராகவும் ஈடுபட்டார்.
வெர்னான் கோன்சால்விஸ்

மும்பையில் வசிக்கும் கோன்சால்விஸ் அங்குள்ள பல கல்லூரிகளில் கற்பித்திருக்கிறார். அவர் கடந்த பல ஆண்டுகளாக மதிப்புமிக்க பத்திரிகைகளுக்காக எழுதி வருகிறார். அவரை மகாராஷ்டிராவின் பயங்கரவாத தடுப்புப் படை 2007-இல் கைது செய்தது. அவர் நக்சலைட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது. அவர் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார், அதாவது யுஏபிஏ. யுஏபிஏ மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் மும்பை நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி. என்று தீர்ப்பளிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர், பெரும்பாலான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்
அருண் ஃபெரேரா

ஃபெரேரா மும்பையில் வசிக்கும் மனித உரிமை வழக்கறிஞர். அவர் பல மனித உரிமை இயக்கங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவில் (சிபிடிஆர்) உறுப்பினராக இருந்துள்ளார், அவர் இந்திய மக்கள் வழக்கறிஞர்கள் சங்கத்துடனும் தொடர்பு கொண்டுள்ளார். மும்பையில் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் மறுவாழ்வுக்கான இயக்கத்தையும் அவர் தொடங்கினார். 2007-ஆம் ஆண்டில், அவர் ஒரு மாவோயிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டு, யுஏபிஏ இன் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 2014-ஆம் ஆண்டில், அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். அவர் சிறையில் கழித்த நாட்களில் ஒரு புத்தகத்தை எழுதினார், மேலும் சிறையில் இருந்தபோது சட்ட ப்படிப்பையும் மேற்கொண்டார்.
சுதா பரத்வாஜ்

சுதா பரத்வாஜ் ஒரு பிரபலமான மனித உரிமை ஆர்வலர், தொழிலாளர் தலைவர் மற்றும் வழக்கறிஞர். சுதா பரத்வாஜ் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் படித்த பின்னர் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் சமூகப் பணிகளை செய்து வருகிறார். தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினருக்கான வழக்கறிஞராக அவர் அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகிறார், அதனால்தான் அவர் அரசாங்க எதிர்ப்பு மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு அனுதாபம் கொண்ட ஒரு செயற்பாட்டாளர் என்று அழைக்கப்படுகிறார். அவர் நன்கு அறியப்பட்ட சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார்.
எழுத்தாளர்-பத்திரிகையாளர் கெளதம் நவலகா மற்றும் சமூக விவகார அறிஞர் ஆனந்த் டெல்டும்ப்டே ஆகியோரின் பெயர், மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் எஃப்.ஐ.ஆரில் 22 ஆகஸ்ட் 2018 அன்று புணே காவல்துறையால் சேர்க்கப்பட்டது. இதற்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் சவால் விடுத்ததால் ஒரு நீண்ட சட்டப் போராட்டம் ஏற்பட்டது. புணே காவல்துறையும் பின்னர் என்ஐஏவும் அவர்களது முன் ஜாமீன் விண்ணப்பத்தை எதிர்த்தன, ஆனால் அவர்களை காவலில் எடுக்க முடியவில்லை. இந்த இருவரையும் கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஏப்ரல் 8, 2019 அன்று நவ்லகா மற்றும் டெல்டும்ப்டே ஆகியோரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தபோது, நவ்லகாவும் டெல்டும்ப்டேவும் 14 ஏப்ரல் 2019 அன்று என்ஐஏவிடம் சரணடைந்தனர்.

அவர்கள் இருவரும் தடைசெய்யப்பட்ட அமைப்பான சிபிஐ மாவோயிஸ்டின் பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று காவல்துறை குற்றம் சாட்டியது. அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என்று நீதிமன்றத்தில் மனு சம்ர்ப்பிக்கப்பட்டது.. காவல்துறையினரின் கூற்றுப்படி, தடைசெய்யப்பட்ட அமைப்பில் கெளதம் நவ்லகா முக்கிய பங்கு வகிக்கிறார். மக்களை அணிசேர்ப்பது, அவர்களுக்கு பணம் கொடுப்பது, திட்டமிடுவது மற்றும் தேச விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக போலிசார் கூறுகின்றனர். நவலகாவிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள், தொண்டர்களை தலைமறைவாக இருக்கச்செய்து, நாட்டிற்கு எதிராக வேலை செய்யத் தூண்டினார் என்பதைக் காட்டுகிறது என்று காவல்துறை கூறுகிறது.
ஆனந்த் தெல்டும்ப்டே தடைசெய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிப்பதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். தெல்டும்ப்டே, உலகம் முழுவதும் நடக்கும் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, தடைசெய்யப்பட்ட அமைப்பின் கருத்துக்களை அங்கு பரப்பினார் என்று போலீசார் கூறுகிறார்கள். பலரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் இருந்து 'தோழர் ஆனந்த்' என்ற பெயர் தெரியவந்துள்ளது. ஆனந்த் டதெல்டும்ப்டேவின் பங்கு மிகவும் தெளிவாக உள்ளது என்று போலீஸ் கூறுகிறது. அவர் ஆய்வு வட்டங்கள் மூலம் வெறுப்பின் உணர்வை ஊக்குவித்து வந்தார் என்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பிடமிருந்து பணம் பெற்றார் என்றும் கூறப்பட்டுள்ளது
அவரது ஜாமீன் மனுவை புணே அமர்வு நீதிமன்றம் நிராகரித்ததால், ஆனந்த் தெல்டும்ப்டேவை பிப்ரவரி 1, 2019 அன்று போலீசார் கைது செய்தனர். உச்சநீதிமன்றம் அவர் கைதுசெய்யப்படுவதற்கு தடை விதித்ததால், அவரை அடுத்த நாளே விடுவிக்க வேண்டிவந்தது..
கெளதம் நவலகா

கெளதம் நவலகா ஒரு பிரபலமான ஆர்வலர். அவரும் ஒரு எழுத்தாளர். டெல்லியில் வசிக்கும் அவர்,இடதுசாரி மற்றும் தீவிரவாத இயக்கங்கள் குறித்து நிறைய எழுதியுள்ளார். அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், கடத்தப்பட்ட போலீஸ்காரர்களை மாவோயிஸ்டுகளிடமிருந்து விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் அவர் ஒரு மத்தியஸ்தரின் பங்கையும் வகித்துள்ளார். அவர் ஒரு சிவில் உரிமை ஆர்வலராக பல இயக்கங்களுடன் தொடர்புடையவர்.
ஆனந்த் தெல்டும்ப்டே

ஆனந்த் தெல்டும்ப்டே ஒரு அறிவு ஜீவி, அறிஞர் மற்றும் சர்வதேச புகழ் பெற்றவர். அவரது பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர் ஒரு பொறியியலாளர் மற்றும் ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் பயின்றவர். அவர் பாரத் பெட்ரோலியத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருந்துள்ளார், ஆனால் இதன் பின்னர் அவர் படிப்பு-கற்பித்தல் பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஐ.ஐ.டி கரக்பூரில் பேராசிரியராக இருந்தார். தற்போது கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் மூத்த பேராசிரியராக உள்ளார். அவர் பல பத்திரிகைகள் மற்றும் இதழ்களில் தவறாமல் எழுதி வருகிறார். ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் (சிபிடிஆர்) உறுப்பினராக பல இயக்க்கங்களில் ஈடுபட்டுள்ளார்.
ஹனி பாபு எம்டி.

பீமா கோரேகாவ் வழக்கில் கைது செய்யப்பட்ட 12 வது நபர் ஹனி பாபு ஆவார். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இணை பேராசிரியராக உள்ள இவர், மொழியியலில் நிபுணத்துவம் பெற்றவர். டெல்லி பல்கலைக்கழக வலைதளத்தின்படி, அவர் மொழி அரசியல் மற்றும் சமூக அறிவியலிலும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். ஜூலை 28 அன்று டெல்லியில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பீமா கோரேகாவ் வன்முறையில் தடைசெய்யப்பட்ட அமைப்பின் பங்கை விசாரிக்கும் நிறுவனமான என்ஐஏ, ஹனி பாபு, எல்கர் பரிஷத்தின் அமைப்பாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், இந்த உண்மையை நிரூபிக்க ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறுகிறது. மாவோயிஸ்டுகள் தொடர்பாக தண்டிக்கப்பட்டுள்ள மற்றொரு பேராசிரியர் ஜி.என்.சாய்பாவை விடுவிப்பதற்கான பிரசாரத்தில் ஹனி பாபு ஈடுபட்டிருந்தார், ஹனி பாபுவின் மனைவியும் டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் கற்பிக்கிறார். ஹனி பாபுவை அறிந்த பல சக பேராசிரியர்கள் அவர் ஒரு பிரபலமான பேராசிரியர் என்றும் மாணவர்கள் அவரது சொற்பொழிவுகளைக் கேட்க அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்றும் கூறுகிறார்கள். ஹனி பாபு சாதி மற்றும் தலித்துகளின் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
அரசு மாறியவுடன் மாற்றப்பட்ட விசாரணை முகமை
அடுத்த சில மாதங்களில் புணேவில் உள்ள விஸ்ராம்பாக் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர்அடுத்த சில மாதங்களில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரில் 9 பேரை புணே போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் புணே போலீசாரும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர், அதன் பின்னர் ஒரு துணை குற்றப்பத்திரிகையும், 21 பிப்ரவரி 2019 அன்று, தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜனவரி 8, 2018 அன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. மே 17, 2018 அன்று புணே காவல்துறை அதில் யுஏபிஏவின் 13,16,18,18பி, 20, 38, 39 மற்றும் 40 பிரிவுகளை விதித்தது.
இந்த வழக்கில் 2020 ஜனவரி 24 ஆம் தேதி என்ஐஏ, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது, இதில் ஐபிசியின் 153 ஏ, 505 (1) (பி), 117 மற்றும் 34 ஆகிய பிரிவுகள் விதிக்கப்பட்டுள்ளன. கூடவே, யுஏபிஏவின் 13,16,18,18 பி, 20, 39 பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன

இந்த நேரத்தில், மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனை கூட்டணி அரசு இருந்தது. அக்டோபர் 2019 இல் நடந்த வியத்தகு நிகழ்வுகளுக்குப் பிறகு, மிகப்பெரிய கட்சியான பாஜக மாநில அதிகாரத்தில் இருந்து வெளியே வர நேரிட்டது. சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்சிபி கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது.
2019 டிசம்பர் 22 அன்று, புணே காவல்துறையின் எல்கர் பரிஷத் வழக்கு விசாரணை, கேள்விக்குரியது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) யின் தேசிய தலைவர் சரத் பவார் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். "தேச துரோக குற்றச்சாட்டில் ஆர்வலர்களை சிறையில் அடைப்பது தவறு" என்று அவர் கூறினார். ஒரு ஜனநாயகத்தில், அனைத்து வகையான கருத்துக்களையும் வெளிப்படுத்த சுதந்திரம் உள்ளது. புணே காவல்துறையின் நடவடிக்கை தவறான மற்றும் பழிவாங்கும் உணர்வால் தூண்டப்படுகிறது. சில அதிகாரிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்தார். இந்த அறிக்கைக்கு பின்னர் சர்ச்சை வெடித்தது. முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் போலீஸ் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.
இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, 2020 ஜனவரியில், இந்த வழக்கை புணே காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஷரத் பவாரின் என்சிபி கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இந்த முடிவை எதிர்த்தார், அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கை எடுத்துக் கொண்ட பின்னர், மும்பையில் என்ஐஏ, தனி எஃப்.ஐ.ஆர் ஒன்றை பதிவு செய்தது, இதில் 11 குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் இன்னும் சிலரின் பெயர்கள் இடம்பெற்றன. இந்த வழக்கில் இந்திய சட்டத்தின் பிற பிரிவுகளுடன் கூடவே யுஏபிஏவையும், அது விதித்தது. இருப்பினும், இந்த வழக்கில், என்ஐஏ, 124 (ஏ) அதாவது தேச துரோக பிரிவை சேர்க்கவில்லை.
பீமா கோரேகாவ் நீதி விசாரணை ஆணையம்
ஜனவரி 1 ஆம் தேதி, பீமா கோரேகாவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன்முறை வெடித்த பின்னர், நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இநதப்பிரச்சனை பெரிதானதும், வன்முறை எவ்வாறு தொடங்கியது என்பதை விசாரிக்க ஒரு நீதி ஆணையம் அமைக்கப்பட்டது. பல 'உண்மை கண்டறியும்' குழுக்கள் வெவ்வேறு நபர்களை சுட்டிக்காட்டின. இதற்கிடையில், போலீஸ், கிராமப்புற காவல்துறை மற்றும் புணே நகர காவல்துறை, இரண்டு வெவ்வேறு திசைகளில் விசாரணை நடத்தியது. மகாராஷ்டிராவின் அப்போதைய தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசு, 2018, பிப்ரவரி 9 அன்று வன்முறையை விசாரிக்க இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட நீதி ஆணையத்தை அமைத்தது. இந்த குழுவின் தலைவராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஜே.என்.பட்டேல் நியமிக்கப்பட்டார்.

இந்த ஆணையம், தனது அறிக்கையை நான்கு மாதங்களில் சமர்ப்பிக்கவிருந்தது, ஆனால் இப்போது வரை கமிஷனின் பதவிக்காலம் நான்கு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது, இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை. நான்காவது முறையாக, ஆணையத்தின் பதவிக்காலம் 2020 ஏப்ரல் 4 வரை நீட்டிக்கப்பட்டது, ஆனால் அதன்பிறகு கொரோனா காரணமாக, லாக் டவுன் தொடங்கியது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, நான்கு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய ஆணையம், தற்போது ஆறு மாத நீட்டிப்பை மீண்டும் கோரியுள்ளது.
இதுவரை 29 சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களை ஆணையத்திற்கு அளித்துள்ளனர், மேலும் 50 சாட்சிகளை ஆணையத்திற்கு முன் ஆஜராகக் கூறும் சம்மன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவாரை சாட்சியாக அழைத்துள்ளது. இதற்கு முன், பவார் ஆணைத்திடம் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். இது தவிர, வெவ்வேறு நபர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சுமார் 500 பிரமாணப் பத்திரங்கள், ஆணையத்தால் பெறப்பட்டுள்ளன.
இந்துத்துவ தொண்டர்
பீமா கோரேகாவ் வன்முறையில் இடதுசாரி தொண்டர்கள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை புணே நகர காவல்துறை விசாரித்த நிலையில்,மறுபுறம் புணே கிராம காவல்துறை 1 ஜனவரி 2018 அன்று நிகழ்ந்த வன்முறைக்கு பின்னால் பல இந்துத்துவ தலைவர்களின் பங்கு இருப்பதான புகார்களை விசாரித்தது.
இந்துத்துவ தலைவர்கள் பீமா கோரேகாவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன்முறைக்காக கும்பலைத் தூண்டினர் என்று .ஜனவரி 2 ம் தேதி, பிம்ப்ரி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது, ஜனவரி 1 ம் தேதி தலித் அமைப்புகளின் கூட்டத்தில் வன்முறையை நிகழ்த்திய செய்த கும்பலுக்கு, இந்துத்துவ தலைவர்கள் மிலிந்த் எக்போடே மற்றும் சம்பாஜி பிடே ஆகியோர் தலைமை தாங்கினர் என்று புகார் அளித்த அனிதா சால்வே குறிப்பிட்டுள்ளார்.

மிலிந்த் எக்போடே
மிலிந்த் எக்போடே
அவர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தனது கண்களால் பார்த்ததாகவும், எஃப்ஐஆர் பதிவு செய்த பெண்மணி கூறுகிறார். 'வெற்றி விழா’ நிகழ்ச்சியில் பங்கேற்க தனது தோழி அஞ்சனாவுடன், தான் அங்கு சென்றதாக புகார் அளித்த பெண் கூறுகிறார். அவரது தோழி ஷிகார்பூர் டோல் பிளாசாவை கடந்து சனஸ்வாடியை அடைந்தபோது, அங்கு இருந்த கூட்டம், கற்களை வீசி தீ வைக்கத் தொடங்கியது.

சம்பாஜி பிடே
சம்பாஜி பிடே
கூட்டத்தில் இருந்த பலரிடம் ஆயுதங்கள் இருந்ததாகவும், அவற்றைக்கொண்டு மக்களை அவர்கள் அடிப்பதாகவும் எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆரில், சம்பாஜி பிடே சிவாஜிநகர் அறக்கட்டளையின் தலைவராகவும், மிலிந்த் எக்போடே, இந்து ஜனஜாகரன் சமிதியின் தலைவராகவும் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுடன் பல உயர் சாதி மக்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மிலிந்த் எக்போட்டேயின் முன் ஜாமீனை செஷன்ஸ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தபோது, அவர் மீது கலகம் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர், புணே போலீசாரால் 2018 மார்ச் 14 அன்று கைது செய்யப்பட்டார். அனிதா சால்வேவின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், புணே நீதிமன்றம் அவரை 4 ஏப்ரல் 2018 அன்று ஜாமீனில் விடுவித்தது. ஆனால் ஷிகார்பூர் போலீசாரின் புகாரின் பேரில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். வன்முறைக்கு சற்று முன்பு, எக்போடே மற்றும் அவரது ஆதரவாளர்கள், சில துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாக ஷிகார்பூர் போலீசார் தெரிவித்தனர்.

ஏப்ரல் 19 அன்று புணே செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டவரான சம்பாஜி பிடே, 2018 ஜனவரி 1 ஆம் தேதி பீமா கோரேகாவில் தங்கியிருந்து மக்களைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டபோதிலும், கைது செய்யப்படவில்லை. பல அமைப்புகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தையும் அணுகின. இந்த வழக்கில் காவல்துறை இதுவரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு எஃப்.ஐ.ஆர்களைத் தவிர, பீமா கோரேகாவ் வன்முறை தொடர்பாக, புணே காவல்துறை சரகப்பகுதிகளில், மொத்தம் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யார் இந்த எக்போடே மற்றும் பிடே?
புணேவின் இந்துத்துவ தொண்டர் மிலிந்த் எக்போடே, தனது சித்தாந்தத்தின் காரணமாக பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அவர் அனைத்து இந்து அகாடி என்ற அமைப்பை நடத்தி வருகிறார், அவர் நீண்ட காலமாக, பசுக்கள் பாதுகாப்பு இயக்கத்தை நடத்தி வருகிறார். பிரதாப்கர் கோட்டையில் இருந்த முகலாய தளபதி அஃப்சல் கானின் கல்லறையை அகற்ற அவர் கடுமையான போராட்டத்தை தொடங்கினார். அதன் பின்னர் சதாரா மாவட்டத்திற்குள் அவர் நுழைவது மீது தடைவிதிக்கப்பட்டது.
காதலர் தினம் கொண்டாடப்படுவதை எதிர்த்தும் அவர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். அவர் அரசியல் ரீதியாகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார், மேலும் இந்து மகாசபை, சிவசேனை மற்றும் பாஜகவுடன் தொடர்பு கொண்டிருந்தார். அவர் 2014 சட்டமன்றத் தேர்தலில் சிவசேனை தரப்பில் போட்டியிட்டார், ஆனால் தோல்வியை தழுவினார். புணே மாநகராட்சியின் கவுன்சிலராகவும் அவர் இருந்துள்ளார். சம்பாஜி பிடே வை, அவரது ஆதரவாளர்கள் குருஜி அழைக்கின்றனர். 85 வயதான இந்துத்துவ தொண்டர் பிடே, மேற்கு மகாராஷ்டிராவின் சாங்லியைச் சேர்ந்தவர்.
அவர்கள் சிவப்பிரதிஸ்தான் இந்துஸ்தான் என்ற அமைப்பை நடத்துகிறார்கள். இந்துத்துவா குறித்து சொற்பொழிவுகளைச் செய்ய அவர் இடத்திலிருந்து இடத்திற்குச் செல்கிறார். அவர் தனது ஆரம்ப நாட்களில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் (ஆர்.எஸ்.எஸ்) தொடர்பு கொண்டிருந்தார், ஆனால் பின்னர் சிவபிரதிஸ்தானை நிறுவ ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து விலகினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற பாஜக தலைவர்களுடனான அவரது நெருக்கம் பொது களத்தில் உள்ளது.
பிடே தனது அறிக்கைகள் மற்றும் தனது செயல்பாடுகள் காரணமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில், சாங்லியில் கலவரத்தைத் தூண்டியது உட்பட, அவர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளும் இருந்தன. ஆனால் பீமா கோரேகாவ் சம்பவத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் கைவிடப்பட்டதாக தகவல் அறியும் உரிமை(ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.
கீர்த்தி தூபே, மயூரேஷ் கொன்னூர்
வரைகலை: புனீத் பர்னாலா, கோபால் ஷூன்யா
புகைப்படங்கள்: Getty
முதன்மை தயாரிப்பாளர்: ராஜேஷ் ப்ரியதர்ஷு
தயாரிப்பு: ஷதாப் நஸ்மி