தொடரும் மழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட்

தொடரும் மழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட்

இமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஷிம்லா உட்பட பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ஷிம்லாவின் கிருஷ்ணா நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 7 வீடுகள் சரிந்து விழுந்தன.

இதில் சிலர் இடிபாடுகளுக்கு இடையில் இன்னும் சிக்கியிருக்கலாம் என மீட்புக் குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர். தேசிய, மாநில பேரிட மீட்புக் குழுவினர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: