காணொளி: கடும் பனிப் புயலை எதிர்கொள்ள தயாராகும் அமெரிக்கா
காணொளி: கடும் பனிப் புயலை எதிர்கொள்ள தயாராகும் அமெரிக்கா
வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்காவின் சில பகுதிகளில் குளிர்காலப் புயல் வீசத் தொடங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடும் பனிப்பொழிவு மற்றும் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை நிலவக்கூடும்.
இதனால் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருவதால் கடைகளில் பொருட்கள் காலியாகி வருகின்றன.
சாலைகளில் பனி உறைவதைத் தடுப்பதற்காக, அதன் மீது உப்பு கொட்டப்பட தயார் நிலையில் உள்ளது. அமெரிக்காவைக் கடந்து செல்லும் இந்த குளிர்காலப் புயல் காரணமாக மெம்ஃபிஸ், நாஷ்வில், வாஷிங்டன் டி.சி., பால்டிமோர், பிலடெல்பியா, நியூயார்க் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



