அரை ஏக்கர் நிலத்தில் 60 ஆழ்துளைக் கிணறுகள்.. நீருக்காக ஒன்றிணைந்த கிராமம் (காணொளி)
ஆந்திராவின் அனந்தபுரமு மாவட்டத்தில் உள்ள புட்லூர் தொகுதியின் மதுகுபள்ளி கிராமம், நாட்டின் வறண்ட பகுதிகளில் ஒன்று.
ஆனால் இங்குள்ள மக்கள் அருகருகே ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் விவசாயம் செய்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள், தண்ணீருக்காக வெறும் அரை ஏக்கர் நிலத்தில் 60 ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளனர்.
பொதுவாகவே, தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ள ஒரு விவசாயி அதனருகில் மற்றொரு விவசாயியை ஆழ்துளை கிணறு தோண்ட அனுமதிக்கமாட்டார். ஆனால், இந்த கிராமத்தில் உள்ள இச்சிறிய நிலப்பகுதி கிராம மக்கள் மத்தியில் அனைவருக்கும் தண்ணீர் சமமாக கிடைக்க வேண்டும் என்ற ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கிராமவாசிகளில் சிலர் ஒரு சில காரணங்களுக்காக ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்றாலும் கூட, விவசாயத்திற்கு தண்ணீர் பகிர்வு என்று வரும்போது ஒன்றிணைந்துக் கொள்வார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



