இலங்கை: படகுகளை பழுதுநீக்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பெண்கள்

காணொளிக் குறிப்பு, பெண்களே படகுகளை பழுதுபார்க்கும் பட்டறை இலங்கையில் செயல்பட்டு வருகிறது.
இலங்கை: படகுகளை பழுதுநீக்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பெண்கள்

படகுகளைப் பழுதுநீக்கும் இந்தப் பட்டறை, இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள பாசையூரில் அமைந்திருக்கிறது. இதை தேவகுமார்என்பவர் நடத்தி வருகிறார். இங்கு வேலை பார்க்கும் அனைவரும் பெண்கள் என்பதே இந்தப் பட்டறையின் சிறப்பு. யாழ்ப்பாணம் முழுவதும் அனைத்து விதமான படகுகளும் இங்கு பெண்களால் பழுது நீக்கப்படுகின்றன.

இங்கு வேலை பார்க்கும் அனைத்துப் பெண்களும் இலங்கை உள்நாட்டு யுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள்.

இங்கு பெண்கள் வேலை பார்ப்பதைக் கண்டு பலரும் வியப்பதாக தேவகுமார் கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)