மண்ணில் புதைந்த தொழிலாளிகள்: சமார்த்தியமாக மீட்ட சக தொழிலாளிகள்

மண்ணில் புதைந்த தொழிலாளிகள்: சமார்த்தியமாக மீட்ட சக தொழிலாளிகள்

காங்கோவில் மண்ணில் புதைந்த தொழிலாளிகளை சக தொழிலாளிகள் கைகளால் மண்ணிலை தோண்டி மீட்டனர்

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் கன மழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த 9 தொழிலாளிகள் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்தனர். அங்கிருந்த சக தொழிலாளிகள் உடனடியாக தங்களது கைகளால் மண்ணை தோண்டி தொழிலாளிகள் வெளியே வருவதற்கு வழியை ஏற்படுத்து தந்தனர். அதன்வழியாக 9 தொழிலாளிகளும் பத்திரமாக வெளியே வந்தனர்.

பாதுகாப்பு நடைமுறைகள், முறையான உபகரணங்களின் பற்றாக்குறை போன்றவை உள்ளூர் சுரங்கங்களில் ஏற்படும் இத்தகைய சிக்கல்களுக்கு காரணமாக கூறப்படுகின்றன. முறைசாரா, அபாயகரமான சுரங்கங்களை உடைய தென் கிவு மாகாணத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அன்றாட நிகழ்வாக கருதப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: