அமெரிக்காவில் புதிய பறக்கும் கார் சோதனை

அமெரிக்காவில் புதிய பறக்கும் கார் சோதனை

ஒரு அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் தனது பறக்கும் காரின் மாதிரி காட்சிகளை வெளியிட்டுள்ளது.

"இது வழக்கமான கார் போலவே இருக்கும், வழக்கமான கார் போலவே செயல்படும். நீங்கள் ஓட்டிச் சென்று கொண்டே டேக் ஆஃப் செய்யலாம், எந்த மாற்றமும் இல்லாமல் போக்குவரத்து நெரிசல், தடைகள் அல்லது ஆறுகளுக்கு மேலே பறக்கலாம். அதன் பின் மீண்டும் சாலையில் ஓட்டலாம் அல்லது பை-ப்ளேன் மோடிலேயே தொடர்ந்து பறக்கலாம். வாகன ஓட்டியாக அதை தேர்வு செய்வது உங்கள் கையில் உள்ளது", என்று அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜிம் டுகோவ்னி கூறுகிறார்.

இந்த சோதனை காரில் மனிதர்கள் இருந்தார்களா என்று இந்த காணொளியை வைத்து கூறுவது சற்று கடினமாக இருந்தது. ஆனால் இந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது அதில் ஒரு பைலட் இருந்தார் என அந்நிறுவனம் கூறுகிறது.

இந்த பறக்கும் கார் பற்றிய கூடுதல் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)