அதீத மழையால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள் மீட்கப்பட்டது எப்படி? – காணொளி
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் சுமார் 957 பயணிகள் பயணித்தனர்.
ஆனால் அந்த பயணிகளுக்கு அப்போது தெரியாது, ஒரு இரவில் முடிய வேண்டிய பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கும் மேல் ஆகப் போகிறது என்று.
ஸ்ரீவைகுண்டதிற்கு அடுத்து இருக்கும் தாதன்குளம் அருகே கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு, தண்டவாளத்தின் அடிப்பகுதியில் இருந்த சரளைக் கற்கள் முழுவதும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் ரயில்வே தண்டவாளம் அந்தரத்தில் தொங்கிய படி நின்றது.
இந்த தகவல் உடனடியாக லோகோ பைலட் ஷாஜுவுக்கு தெரிவிக்கப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கொண்டு ரயிலை இயக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டது.
இதனால் அந்த ரயிலில் பயணித்தவர்கள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர். இரண்டு நாட்களுக்குப்பின் அவர்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்களின் அனுபவத்தை அவர்களே கூறுகிறார்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



