காணொளி: அன்னா சென்டி - நீதித்துறையின் உயர் பதவியில் கால்பதித்த இந்திய பெண்
நீதித்துறையின் உயர் பதவியில கால்பதித்த முதல் இந்திய பெண் அன்னா சென்டி.
இந்தியாவின் முதல் பெண் நீதிபதிகளில் ஒருவராக அறியப்படுபவர்.
உயர் நீதிமன்ற நீதிபதியான முதல் இந்தியப் பெண்.
அதுமட்டுமில்ல... உலகத்துலயே உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற 2வது பெண் அன்னா செண்டிதான்.
1905-ல் தற்போதைய கேரளாவில் பிறந்தாங்க.
1925ல் திருமணம் ஆகிடுச்சு. 1926ல திருவனந்தபுரத்துல உள்ள அரசு சட்டக் கல்லூரியில படிச்சாங்க.
அந்த மாநிலத்துலயே முதல்முதலா சட்டப்படிப்பு படிச்ச பெண் இவங்கதான்.
இவங்க சட்டம் படிக்குறதுக்கு இவரோட கணவரும் ஒரு தூண்டுகோலா இருந்திருக்காரு.
அன்னா சென்டி 1937-ல மாவட்ட நீதிமன்றத்துல நீதிபதியா பதவியேற்றாங்க.
பிறகு 1959ல் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியா நியமிக்கப்பட்டாங்க.
பெண்ணுரிமைக்காக பல இடங்கள்ல அண்ணா செண்டி குரல் கொடுத்திருக்காங்க...
அரசு வேலைகள்ல பெண்களுக்கு இடஒதுக்கீடு வேணும்னு வலியுறுத்துனாங்க.
இவங்க நீதிபதியாகுறதுக்கு முன்னாடியே, 1928-ல, இதுக்காக குரல் எழுப்ப தொடங்கினாங்க.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



