காணொளி: 'ரஷ்ய எண்ணெய் வாங்க மாட்டோம் என மோதி கூறினார்' - டிரம்ப்

காணொளி: 'ரஷ்ய எண்ணெய் வாங்க மாட்டோம் என மோதி கூறினார்' - டிரம்ப்

டிரம்பிடம் செய்தியாளர் ஒருவர், "அரிய கனிமங்கள் ஏற்றுமதி மீதான சீனாவின் தடையை கருத்தில் கொண்டு, இந்தியாவை எதிர்காலத்தில் நம்பகமான கூட்டாளியாக பார்க்கிறீர்களா? மலேசியாவில் மோதியை சந்திக்க திட்டமிட்டுள்ளீர்களா? பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறீர்களா?" என கேட்டார்.

அதற்கு பதிலளித்த டிரம்ப், "நிச்சயமாக, மோதி என்னுடைய நண்பர். எங்களுக்கு இடையே சிறந்த உறவு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் அதைப்பற்றி கூறியிருந்தார், நீங்கள் அறிந்திருப்பீர்கள். ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. ரஷ்யா கொடூரமான போரை தொடர்கிறது. அதனால், ராணுவ வீரர்கள் உட்பட 1.5 மில்லியன் மக்களை அவர்கள் இழந்துள்ளனர்.

இந்த போர் தொடங்கியிருக்கவே கூடாது. இது ரஷ்யா முதல் வாரத்திலேயே வெற்றி பெற்றிருக்க வேண்டிய போர். இப்போது நான்காம் ஆண்டுக்குள் நுழைகிறார்கள். இதை நிறுத்த விரும்புகிறேன். அதனால், ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவதை நான் விரும்பவில்லை. இன்று அவர் (மோதி) என்னிடம் ரஷ்ய எண்ணெயை அவர்கள் வாங்க மாட்டார்கள் என உறுதியளித்தார். இது மிகப்பெரிய விஷயம். சீனாவையும் இப்போது இதை செய்ய வைக்க வேண்டும்." என தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு