You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: உடைகள், பைகளில் பயன்படுத்தப்படும் ‘ஜிப்’ கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு
1890-களில் மக்கள் 'ஹை-டாப்' வகை காலணிகளை அணிந்து வந்தனர். அவற்றில் வரிசையாக 20 முதல் 30 பட்டன்கள் இருக்கும். இவற்றை ஒவ்வொன்றாகப் பூட்டுவதற்கு அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்பட்டது.
இந்தச் சிரமத்தைக் குறைக்க விட்கோம்ப் ஜட்சன் என்பவர், 1893-ஆம் ஆண்டில் 'கிளாஸ்ப் லாக்கர்' என்ற ஒரு கருவியை உருவாக்கினார். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு அது பயனுள்ளதாக அமையவில்லை.
இதன் பின்னர், கிடியோன் சுண்ட்பேக் என்ற பொறியாளர், இந்த வடிவமைப்பில் சிறு மாற்றங்களைச் செய்து அதனை மேம்படுத்தினார். 1913-இல் அவர் உருவாக்கிய வடிவமே இன்றைய நவீன கால 'ஜிப்' (Zip) கருவிக்கு அடிப்படையாக அமைந்தது. இதற்கு அவர் 'செப்பரபிள் ஃபாஸ்டனர்' (Separable Fastener) என்று பெயரிட்டார்.
பின்னர் 1923-ஆம் ஆண்டு 'பி.எஃப். குட்ரிச்' நிறுவனம் ரப்பர் காலணிகளைத் தயாரித்தபோது இந்தக் கருவியைப் பயன்படுத்தியது. அதனை மூடும்போது உண்டான "ஜிப்" என்ற ஒலியை அடிப்படையாகக் கொண்டு, அதற்கு 'ஜிப்பர்' என்று பெயர் வந்தது.
'ஜிப்' கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், பல ஆண்டுகளுக்கு மக்கள் பட்டன்களையே அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே 'ஜிப்' ஒரு புரட்சிகரமான மாற்றமாக உருவெடுத்தது.
தொடக்கத்தில் காலணித் துறையில் அறிமுகமான ஜிப், இன்று பைகள், உடைகள், உறைகள் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு, நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் மிகுந்த வசதியையும் அளிக்கிறது. இன்று 'ஜிப்' இல்லாத ஒரு உலகத்தை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு