You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அம்பானி, அதானி பெயரைச் சொல்லி விமர்சித்த பிரதமர் - ராகுல் காந்தியின் பதில் என்ன?
நீண்ட காலமாகவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோதியுடன் இணைத்து விமர்சித்து வருகிறார்.
ஆனால், அதற்கெல்லாம் பதில் பேசாமல் இருந்த மோதி, முதல் முறையாக தேர்தல் பரப்புரையின்போது அதே அம்பானி, அதானியின் பெயரைச் சொல்லி காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.
புதனன்று தெலங்கானாவின், கரீம்நகர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த மோதி, “தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ராகுல் காந்தி அம்பானி மற்றும் அதானி என்ற பெயர்களை உச்சரிப்பதையே நிறுத்தி விட்டார்,” என்று கூறினார்.
ராகுல் காந்தியை குறிப்பிட்டுப் பேசிய மோதி, “தெலங்கானா நிலத்தில் நின்று நான் கேட்க விரும்புவது, இந்தத் தேர்தலில் எவ்வளவு பணம் அம்பானி மற்றும் அதானியிடம் இருந்து தனக்குக் கிடைத்துள்ளது என்பதை இளவரசர்(ராகுல்) அறிவிக்க வேண்டும். லாரி நிறைய பணம் காங்கிரசுக்கு வந்து சேர்ந்துவிட்டதா?
ஒரே இரவில் இவர்களுக்குள் என்ன ஒப்பந்தம் நடந்தது? திடீரென்று அம்பானி-அதானியை விமர்சிப்பதையே நிறுத்திவிட்டார்,” என்று கூறினார். “கடந்த 5 ஆண்டுகளாக அம்பானி - அதானியின் பெயரைப் பயன்படுத்தி விமர்சனம் செய்துவிட்டு, திடீரென்று நிறுத்திவிட்டீர்கள் என்றால் நிச்சயம் ஏதோவொரு ஒப்பந்தம் நடந்திருக்க வேண்டும். இதற்கு கண்டிப்பாக நீங்கள் பதிலளிக்க வேண்டும்,” என்று பேசினார் மோதி.
பிரதமர் மோதியின் இந்த விமர்சனத்திற்கு ராகுல் காந்தியும் பதில் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது இருவரின் உரைகளும் இந்தியா முழுவதும் வைரலாக பரவி வருகிறது. அப்படி அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)