பிஎச்.டி படித்துவிட்டு காய்கறி விற்பனை செய்து வரும் பஞ்சாப் இளைஞர்

காணொளிக் குறிப்பு, பிஎச்.டி படித்துள்ள பஞ்சாபை சேர்ந்த சந்தீப் சிங், தற்போது வருமானத்திற்காக காய்கறி விற்பனை செய்து வருகிறார்.
பிஎச்.டி படித்துவிட்டு காய்கறி விற்பனை செய்து வரும் பஞ்சாப் இளைஞர்

பஞ்சாபை சேர்ந்த சந்தீப் சிங், பிஎச்டி படித்துள்ளார். இவர், தற்போது காய்கறி விற்பனை செய்து வருகிறார். தனது தேவைகளை பூர்த்தி செய்ய போதிய வருமானம் இல்லாததால், அவர் காய்கறிகளை விற்க ஆரம்பித்துள்ளார். இவர் தன் பயணத்தை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

2017-இல் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற சந்தீப் சிங், இதழியல், அரசியல் அறிவியல், பெண் கல்வி மற்றும் சட்டம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது, நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் இளங்கலை படித்து வரும் இவர், தற்போது காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்.

கடந்த ஜூன் 2023 வரை 11 வருடங்கள் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றிய இவர், முதல் ஐந்து வருடம் ஆசிரியராக பணியாற்றி பின், கௌரவ விரிவுரையாளராகப் பணியமர்த்தப்பட்டார். போதிய வருமானம் இல்லாததால், அவர் தற்போது காய்கறி விற்பனை செய்து வருகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)