You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'நண்பன்' படம் போல் முதியவரை காப்பாற்றிய இளைஞர்
ராஜஸ்தானின் சுரூவில் ஒரு வயதானவரை இரண்டு இளைஞர்கள் பைக்கில் ஏற்றி மருத்துவமனை அவசர பிரிவிற்கு அழைத்துச் சென்றனர்.
இவர் ஹரியானாவிலிருந்து தனது குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
பயணத்தின் போது அவரது இரத்த சர்க்கரை அளவு குறைந்தது, சுரூ நிலையம் வந்தபோது அவரது உடல்நிலை மோசமாகி அவர் மயக்கமடைந்துள்ளார்.
அவரது குடும்பம் ரயில் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் சுரூ நிலையத்தில் தனது உறவினரை விடச் சென்ற ஒரு இளைஞர், அவரை தனது பைக்கில் ஏற்றி நேராக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
தக்க சமயத்தில் சிகிச்சை கிடைத்ததால் இவரின் உடல்நிலை இப்போது நன்றாக உள்ளது.
முழு விவரம் காணொளியில்..
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு