காணொளி:"தாலிபன்களால் சிலைகளை உடைத்தேன்" - பாகிஸ்தான் கலைஞரின் வாழ்நாள் போராட்டம்!

காணொளிக் குறிப்பு, உரிய ஆதரவில்லாமல் தவிக்கும் பர்ன் ஆர்ட் கலைஞர்
காணொளி:"தாலிபன்களால் சிலைகளை உடைத்தேன்" - பாகிஸ்தான் கலைஞரின் வாழ்நாள் போராட்டம்!

பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கானைச் சேர்ந்த கலைஞர் பி.ஏ. படேஷ், சிறு வயது முதலே மனித உருவங்களைச் சிற்பங்களாக வடிப்பதி‌ல் சிறந்து விளங்கினார். ஆனால், தாலிபன்களின் ஆதிக்கம் மற்றும் மத ரீதியான எதிர்ப்புகள் காரணமாக, உயிருக்கு அஞ்சித் தான் செதுக்கிய சிற்பங்களைத் தனது கைகளாலேயே உடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அந்தப் பேரிழப்பிற்குப் பிறகு, தற்போது அவர் 'பர்ன் ஆர்ட்' எனப்படும் நெருப்பால் சுட்டு சணல் துணியில் ஓவியம் வரையும் புதிய கலையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக டாக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மெல்லிய சணல் துணிகளைப் பயன்படுத்தி, 20 முதல் 500 வாட்ஸ் வரையிலான மின்சாரக் கருவிகள் (காவ்யா மற்றும் ஷோலா) மூலம் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி நுணுக்கமான கலைப்படைப்புகளை உருவாக்கி வருகிறார். இருப்பினும், இக்கலைக்கு உரிய அங்கீகாரம் இல்லை என அவர் வருந்துகிறார். அவரைப் பற்றிய விவரங்கள் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு