You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மும்பையின் 'பிக் பென்'; மணிக் கூண்டின் பின்னணியில் தாய்ப்பாசம்
மும்பையில் உள்ள இந்த பிரபலமான கடிகார கோபுரம் லண்டனின் பிக் பென்னை முன்மாதிரியாகக் கொண்டது. சர் கில்பர்ட் ஸ்காட் வடிவமைத்த ராஜாபாய் கோபுரம் 1878 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
51 வயதான மகேந்திர குப்தா இன்றும் கூட இதை கையால் இயக்குகிறார்.
"நான் தினமும் 236 படிகள் ஏறி உச்சியை அடைகிறேன். இதை எண்ணெய் தடவி சுத்தம் செய்கிறேன். சுமார் 250–300 கிலோ எடையை மேலே இழுக்கும் ஒரு கைப்பிடியைப் பயன்படுத்தி கடிகாரத்தை கையால் சுழற்றுகிறேன். மின்சாரம் இல்லை, இது முழுக்க முழுக்க எடை பொறிமுறையிலேயே இயங்குகிறது. இதை தொடர்ந்து இயங்க வைப்பதே எனது ஆசை. இந்தப் பழைய அமைப்பு தொடர்ந்து இயங்கி ஒலிக்க வேண்டும்." என்கிறார் மகேந்திர குப்தா.
2018 முதல் யுனெஸ்கோவின் தளமாக இருக்கும் ராஜாபாய் கோபுரத்தின் பெயருக்குப் பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை உள்ளது.
"இந்தக் கட்டிடத்திற்கான பணத்தை பிரேம்சந்த் ராய்சந்த் என்பவர் வழங்கினார், அவர் ஒரு மிகப்பெரிய தரகரும் பெரும் பணக்காரருமாவார். அவரது தாயார் ராஜாபாய் பார்வையற்றவர். இருட்டுவதற்குள் அவர் சாப்பிட வேண்டியிருந்தது. எனவே, இந்த மணி அடிக்கும் கடிகாரத்தை வடிவமைத்து, உருவாக்கி, இயங்கச் செய்தார். அதனால் அவரது அம்மாவுக்கு நேரத்தை அறிய முடியும் என்பதால்" என்கிறார் கட்டடக் கலைஞர் பிருந்தா சோமயா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு