காணொளி: ராட்சத பள்ளத்தில் இருந்து தண்ணீரை பருகிய மக்கள்

காணொளி: ராட்சத பள்ளத்தில் இருந்து தண்ணீரை பருகிய மக்கள்

இந்தோனீசியாவில் ஏற்பட்ட ரட்சத பள்ளத்தில் உள்ள நீரை குடிக்க வேண்டாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ராட்சத பள்ளம் இந்தாண்டின் தொடக்கத்தில் மேற்கு சுமத்ராவில் உள்ள நெல் வயல்வெளியில் ஏற்பட்டது.

இந்த ராட்சத பள்ளத்தில் உள்ள நீருக்கு மருத்துவ குணம் இருக்கிறது என்று நம்பிய மக்கள் அதை குடித்தனர். ஆனால், பரிசோதனையில் அந்த நீரில் ஈ கோலை (E. coli) என்ற நோய்க்கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அதை குடிக்க வேண்டாம் என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் அங்கு இடிந்துவிழும் அபாயம் இருப்பதால், அந்த பகுதி தற்போது வேலியிட்டு மூடப்பட்டுள்ளது.

மண் அரிப்பு காரணமாக இயற்கையாகவே இந்த ராட்சத பள்ளம் உருவானதாக புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு