இஸ்ரேல் - இரான் மோதல் போராக உருவெடுத்தால் என்ன நடக்கும்? 5 சாத்தியங்கள்
இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான மோதல் தொடர்கிறது. இருநாடுகளும் மாறிமாறி வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. வெள்ளிக்கிழமை இரானில் உள்ள அணுமின் நிலையங்கள் மற்றும் பல இடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் இரானில் 6 மூத்த அணு விஞ்ஞானிகள், இரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டார். இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்களில் ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கு தாக்கப்பட்டதாக இரானின் எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது இரான் நடத்தி வரும் தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இரான் மீதான தாக்குதலை ஆபரேசன் ரைசிங் லயன் திட்டத்தின் ஒரு பகுதி என இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேல் மீதான தாக்குதலை 'ட்ரூ பிராமிஸ் 3 (True Promise 3) என இரான் கூறுகிறது.
இரு தரப்புக்குமான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால், இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என, இரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் எச்சரித்துள்ளார். இரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக யேமனை தளமாகக் கொண்டு செயல்படும் ஹூத்தி குழு தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு இஸ்ரேல் - இரான் மோதல், இரு நாடுகளுக்கும் இடையிலானது என்றே தெரிகிறது. ஐக்கிய நாடுகள் சபையிலும் மற்ற இடங்களிலும் இரு தரப்பிலும் கட்டுப்பாடு தேவை என்று பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதை இருநாடுகளும் பொருட்படுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்? இரு நாடுகள் இடையிலான மோதல் மோசமடைந்தால் நிலைமை எப்படியெல்லாம் மாற வாய்ப்புள்ளது?
விரிவாக காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



