சிவகார்த்திகேயன் ‘அமரனாக’ ஜெயித்தாரா? ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

காணொளிக் குறிப்பு,
சிவகார்த்திகேயன் ‘அமரனாக’ ஜெயித்தாரா? ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் இன்று (அக்டோபர் 31) தீபாவளிக்காகத் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேஜர் முகுந்தின் மனைவி, இந்து ரெபக்கா வர்கீஸின் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இது இரண்டாவது தீபாவளி ரிலீஸ். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், இந்த வருட தீபாவளிக்கு ‘அமரனாக’ துப்பாக்கியைப் பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள் கூறுவது என்ன?

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)