காணொளி: அமெரிக்காவில் சரக்கு விமான விபத்தில் 7 பேர் பலி - என்ன நடந்தது?
காணொளி: அமெரிக்காவில் சரக்கு விமான விபத்தில் 7 பேர் பலி - என்ன நடந்தது?
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூவில் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று புறப்படும் போது விபத்துக்குள்ளானது. அதில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாகவும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்திற்குள் இருந்த 3 பணியாளர்களும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை என்று சரக்கு விமானத்தை இயக்கும் யூ.பி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் சுமார் 38,000 கேலன் எரிபொருளுடன் ஹவாய் நோக்கி புறப்பட்டதாக அமெரிக்க பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. சரக்கு விமானம் வெடித்ததால் பற்றிய தீ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வணிக வளாகங்களையும் சூழ்ந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



