சிரியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு - நேரலையின்போது பதறி ஓடிய செய்திக்குழு
சிரியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு - நேரலையின்போது பதறி ஓடிய செய்திக்குழு
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் தொலைக்காட்சி நேரலையின்போது பாதுகாப்பு அமைச்சகத்தை இஸ்ரேலிய போர் விமானங்கள் அடுத்தடுத்து தாக்கிய காட்சி பதிவானது.
ஜூன் 16-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் போர் விமானத்தின் சத்தமும் அடுத்தடுத்து நடந்த பெரிய அளவிலான வெடிப்பு சத்தமும் பதிவானது. உடனே ருடாவ் தொலைக்காட்சியின் செய்திக்குழு பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர்.
அதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்பு நடந்த டிரோன் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக சிரியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இதேபோல, மற்றொரு நேரலையின் போதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் காட்சி பதிவானது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



