காணொளி: ஹரியாணாவில் ராட்டின விபத்து - என்ன நடந்தது?
காணொளி: ஹரியாணாவில் ராட்டின விபத்து - என்ன நடந்தது?
ஹரியாணாவின், ஃபரிதாபாத்தில் சனிக்கிழமை ஒரு கண்காட்சியின் போது ராட்டினம் விபத்துக்குள்ளானது. இதில், அங்கு பணியில் இருந்த ஒரு காவலர் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்தின் போது ராட்டினத்தில் சுமார் 19 பேர் இருந்ததாக அந்த செய்தி கூறுகிறது. விபத்தையடுத்து, ராட்டினம் இயக்குபவர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



