காணொளி: சீனாவில் சந்திர புத்தாண்டை வரவேற்ற மனித உருவ ரோபோக்கள்

காணொளிக் குறிப்பு, காணொளி: சந்திர புத்தாண்டை வரவேற்கும் மனித உருவ ரோபோக்கள்
காணொளி: சீனாவில் சந்திர புத்தாண்டை வரவேற்ற மனித உருவ ரோபோக்கள்

சீனாவில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில் மனித உருவ ரோபோக்கள் இளம் குங்-பூ கலைஞர்களுடன் நேருக்கு நேர் மோதின.

அந்த ரோபோக்கள் பாரம்பரிய குங்-பூ ஆயுதங்களையும் பயன்படுத்தி தங்கள் வேகம், சமநிலை, ஒருங்கிணைப்பு மற்றும் துல்லியத்தை வெளிப்படுத்தின.

இந்த கலை நிகழ்ச்சி சீன வீடுகளில் சந்திர புத்தாண்டின் பிரபல பாரம்பரியமாக உள்ளது. உலகில் ஆண்டுதோறும் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இது என்று கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு அங்கீகரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு