திமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டு கூட்டணியில் சேர்ந்தது ஏன்? கமல்ஹாசன் கூறியது என்ன?
திமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டு கூட்டணியில் சேர்ந்தது ஏன்? கமல்ஹாசன் கூறியது என்ன?
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், திமுக கூட்டணி உதவியோடு தற்போது நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளார்.
இது தொடர்பாக இன்று திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார் கமல் ஹாசன்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, 'கட்சி துவங்கியபோது திமுக மீது கடுமையான விமர்சனம் வைத்தீர்கள். தற்போது அதே கட்சியுடன் கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறீர்களே?' என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்காமல் சென்ற கமல் ஹாசன், மீண்டும் திரும்பி வந்து "நாட்டுக்குத் தேவை அதனால் வந்திருக்கிறேன்" என்று மட்டும் ஒற்றை வரியில் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



