காணொளி: 65 வயதிலும் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் மூதாட்டி

காணொளிக் குறிப்பு, காணொளி: மகாராஷ்டிராவில் 65 வயதிலும் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் மூதாட்டி
காணொளி: 65 வயதிலும் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் மூதாட்டி

65 வயதான மங்கள் அவாலே, மகாராஷ்டிராவின் கரட் நகரில் ஆட்டோ ஓட்டுகிறார்.

"நான் மார்ச் 2025இல் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன். என் மகன் எங்கள் குடும்பத்திற்காக ஒரு ஆட்டோ வாங்கியிருந்தான். அவன் மாநில அரசின் ஓட்டுநராக வேலை செய்கிறான். ஆட்டோ வீட்டில் பயன்படுத்தப்படாமல் கிடந்தது, அதனால் நான் அவனிடம், 'எனக்கு ஓட்ட கற்றுக் கொடு. உனக்கு உதவும் வகையில் நானும் சம்பாதிப்பேன்' என்றேன்." என்கிறார் அவர்.

கணவர் இறந்த பிறகு, ஒரு விவசாயக் கூலியாக வேலை செய்து தனது நான்கு குழந்தைகளையும் படிக்க வைத்தார் மங்கள் அவாலே. அவர் தன் வாழ்வில் ஓட்டிய முதல் வாகனம் ஆட்டோ தான்.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு