You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: காட்டுத்தீக்கு நடுவே துளியும் சேதமின்றி தப்பிய 'பழத்தோட்டம்'
துருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பழத்தோட்டம் ஒன்று தப்பித்துள்ளது. கோடையில் ஏற்பட்ட இந்த தீயில் பெரும் பரப்பு நாசமானது.
விவசாயி ஹலீல் கிராஸ் கூறுகையில், "எல்லா ஆண்டும் காட்டுத்தீ ஏற்படும், ஆனால் இப்படி பார்த்ததில்லை. என் பழத்தோட்டமும் அவ்வளவுதான் என நினைத்தேன். ஆனால், பழத்தோட்டம் அப்படியே இருந்தது. அதிசயமாக இருந்தது, ஆச்சர்யத்தில் இருந்தேன்." என்றார்.
இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தின் வன பொறியியல் பேராசிரியர் தொகனே டொலுனே கூறுகையில், "நன்கு பராமரித்ததால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. சரியான இடைவெளியில், சிறிய மரங்களாக அவை இருந்தன. குறிப்பாக நிலம் நன்கு உழப்பட்டிருந்தது." என்றார்.
அதைச் சுற்றி அகலமான பாதை இருந்ததும் காரணம்.
"இதற்கு சொட்டுநீர் பாசனம் செய்யப்பட்டது. அடிமரம், இலைகளில் போதிய நீர் இருந்ததால் வெப்ப காற்று வீசியபோதும் தீ பற்றவில்லை."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு